Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாட்டரியில் ரூ75 லட்சம்..அடித்து பிடுங்கிடுவாங்க சார்..பயந்து போலீஸ் நிலையம் போன புலம்பெயர் தொழிலாளி

கேரளாவில் பரிசுத்தொகை விழுந்த லாட்டரியை யாராவது பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் எஸ்கே பாதேஷ் என்பவர் கேரளாவில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு லாட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு அடித்துள்ளது. பரிசுத்தொகை விழுந்த லாட்டரியை யாராவது பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் நேராக போலீஸ் நிலையத்தில் போய் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.

கேரளாவிலும் வட மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வீடு கட்டுமான தொழில்கள், சாலை பணிகள் போன்றவற்றில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் ஈடுபட்டு வருவதைக் காண முடியும்.

அந்த வகையில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த எஸ்.கே பாதேஷ் என்பவரும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் தங்கியிருந்து கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். வேலை முடிந்த பிறகு கேரளாவில் விற்கப்படும் லாட்டரிகளை வாங்கும் பழக்கமும் எஸ்.கே.பதேஷூக்கு இருந்துள்ளது.

லாட்டரி சீட்டு வாங்கிய வட மாநில இந்தியர்

லாட்டரி சீட்டு வாங்கிய வட மாநில இந்தியர்

இதனால், அவ்வப்போது எஸ்.கே பாதேஷ் கேரள அரசின் பம்பர் பரிசு லாட்டரிகளை வாங்கி வந்துள்ளார். ஆனால், அவருக்கு பெரிதும் அதிர்ஷ்டம் இதுநாள் வரை கை கொடுக்காமலே இருந்துள்ளது. இந்த நிலையில் தான் கேரள அரசின் ஸ்ட்ரீ ஷக்தி லாட்டரியை வாங்கியிருக்கிறார். எத்தனையோ முறை வாங்கி லாட்டரி சீட்டுக்களை வாங்கிவிட்டோம்.. பெரிதாக பரிசு எதுவும் அடித்தது இல்லை என்பதால் பெரிய நம்பிக்கை எதுவும் இன்றி இருந்துள்ளார்.

ரூ.75 லட்சம் பரிசு

ரூ.75 லட்சம் பரிசு

கடந்த செவ்வாய்க்கிழமை லாட்டரியில் பரிசுத்தொகை எந்த எண்ணிற்கு விழுந்துள்ளது என்ற விவரம் வெளியகியிருந்து இருக்கிறது. கேரளாவில் பல ஆண்டுகள் தங்கியிருந்தாலும் மலையாளம் அவ்வளவாக தெரியாதாம். இதனால், தனது நண்பரான குமார் என்பவர் துணையுடன் லாட்டரி முடிவுகளை பார்த்துள்ளார். பெரிதாக நம்பிக்கையின்றி இருந்த எஸ்.கே பாதஷூக்கு லாட்டரியில் ரூ.75 லட்சம் பரிசு விழுந்து இருப்பதாக நண்பர் சொல்லியிருக்கிறார்.

அடித்து பிடுங்கிவிடுவார்கள் என்று பயம்

அடித்து பிடுங்கிவிடுவார்கள் என்று பயம்

இதனால், இன்ப அதிர்ச்சியில் திளைத்த எஸ்.கே பாதேஷூக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. அதுவும் ரூ.75 லட்சம் பரிசுத்தொகை விழுந்தாலும் அந்த பரிசுத்தொகையை எப்படி வாங்குவது.. யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகள் எதுவும் பாதேஷூக்கு தெரியவில்லை. இதனைக் கொண்டு யாரிடமாவது கொடுத்தால் அடித்து பிடுங்கிவிடுவார்கள் என்றும் அச்சப்பட்டுள்ளார். இதனால், பயந்து போன எஸ்கே பாதேஷ் ஒரே ஓட்டமாக மூவாட்டுபுழா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

உதவி செய்த கேரளா போலீசார்

உதவி செய்த கேரளா போலீசார்

மூவாட்டுபுழா காவல் நிலையத்தில் தனக்கு பரிசுத்தொகை விழுந்து இருப்பதாகவும் ஆனால் இதை கொடுத்து பணத்தை எடுப்பதற்கு அச்சமாக இருப்பதாகவும் எஸ்கே பாதேஷ் கூறியிருக்கிறார். போலீசாரும் அவரது நிலைமையை புரிந்து கொண்டு உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும் பரிசுத்தொகையை எப்படி பெற வேண்டும் என்ற நடைமுறைகளை சொல்லித்தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். தற்போது பெரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கும் எஸ்.கே பாதேஷ், தனது சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்ற தனது கனவை இந்த பரிசுத்தொகை மூலமாக நிறைவேற்றப்போவதாக பூரிப்புடன் சொல்லி வருகிறார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

கேரள மாநில போலீசார் இந்த தகவலை தங்கள் பேஸ்புக் பதிவில் வெளியிட்டு இருக்கின்றனர். யாராவது தனது லாட்டரியை பறித்து சென்று விடுவார்கள் என்ற அச்சத்துடன் கொல்கத்தாவை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியன பாதேஷ் காவல் நிலையம் வந்ததாகவும் அவருக்கு தைரியம் கொடுத்து லாட்டரியில் பரிசை பெறுவதற்கான விதிகளையும் சொல்லிக்கொடுத்ததாக கூறியிருக்கும் காவல்துறை, லாட்ட்டரி பரிசை வாங்குவதற்காக பாதேஷ் காத்திருப்பதாகவும் பரிசை வாங்கியதும் தனது சொந்த ஊருக்கு புறப்பட ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குடும்ப பாரத்தை சுமக்க புலம் பெயர்ந்து வந்த தொழிலாளிக்கு லாட்டரியில் பரிசு அடித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+