"சிக்கன் விற்பனைக்கு தடை.." கோழிகளை காலி செய்யும் பறவை காய்ச்சல்.. கேரளாவில் திடீர் பரபரப்பு
திருவனந்தபுரம்: கடந்த சில நாட்களாகவே சிக்கன் மற்றும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் திடீரெனப் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் கோழிக்கறி உட்படப் பண்ணை பறவைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குளிர் காலம் தொடங்கியது முதலே முட்டை மற்றும் கறிக்கோழி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. சில்லறை விலையில் முட்டை ரூ.8 முதல் 10 வரை விற்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இருப்பினும், விலை உயர்வால் கோழிப் பண்ணை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரேட் எகிறியது
பொதுவாகவே குளிர் காலத்தில் முட்டை வரத்து குறைவதால் விலை அதிகரிக்கும். மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கேக் தேவையும் அதிகரிக்கும் நிலையில், பேக்கரிக்கள் அதிகளவில் முட்டைகளை வாங்கும். இந்தாண்டும் இதே காரணங்களால் தான் முட்டை விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இந்தச் சூழலில் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கோழிப் பண்ணை விவசாயிகளுக்குப் பேரதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு சமயத்தில் சிக்கன், வாத்து உள்ளிட்ட கறி விற்பனை அதிகரிக்கும் நிலையில், அங்குத் திடீரெனப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வீரியமிக்க பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல்
அங்குச் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் நெடுமுடி , செருதனா, கருவாட்டா, கார்த்திகப்பள்ளி, ஆலப்புழா தெற்கு, புன்னப்ர தெற்கு, தக்கழி, புரக்காடு ஆகிய எட்டுப் பஞ்சாயத்துகளிலும், கோட்டயத்தில் குருப்பந்தர, மஞ்ஜூர், கல்லுபுறக்கல், வேலூர் ஆகிய நான்கு கிராமங்களிலும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிக்கன் விற்பனைக்குத் தடை
கோழிகள் மட்டுமின்றி, காடை மற்றும் வாத்துக்களிலும் இந்தப் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோய் கண்டறியப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கோழிக்கறி, வாத்துகள் உட்பட அனைத்து விதமான பறவை இறைச்சிகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் தகவல்
இருப்பினும், இது வீரியமிக்க வைரஸ் என்பதால் 10 கி.மீ. சுற்றளவுக்குள் கறி விற்பனை மற்றும் பறவைகளை எடுத்துச் செல்லவும் தடை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. மேலும், அதிகாரிகளும் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர். நவீன முறையில் பண்ணைகளில் வாத்துகள் வளர்க்கப்படும். ஆனால், குட்டநாடு கிராமங்களில் திறந்தவெளி வாத்து வளர்க்கிறார்கள். இதன் காரணமாகவே நோய் பாதிப்பு எளிதாக நடப்பதாக அதிகாரிகள் கூறினர். மேலும், தற்போது நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.. மாநிலக் குழு ஒன்றும் சோதனைகளை மேற்கொள்ளச் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளது. இதுவரை கேரளாவில் H5N1 பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்கியதில்லை என்ற போதிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications