பிஷப் பிரான்கோ முலக்கல் விடுதலை! பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பு!
திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலிருந்து பேராயர் பிரான்கோ முல்லக்கல்லை கோட்டயம் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
வழக்கில் போதிய ஆதாரங்கள் வலுவாக இல்லாததால் பேராயர் பிரான்கோ முலக்கல்லை விடுவிப்பதாக கோட்டயம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பேராயர் பிரான்கோ முல்லக்கல் மீது கோட்டயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைதும் செய்தது.

நாட்டிலேயே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் பேராயர் என்ற பட்டத்தை பெற்றவர் பிரான்கோ முல்லக்கல். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்ட பேராயராக இருந்த இவர், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டால் கோட்டயம் காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளானார்.
மேலும், பேராயர் குறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொண்டார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கேரள மாநிலம் கோட்டயம் கூடுதல் சிறப்பு நீதிமன்றம், கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல்லை விடுவித்து உத்தரவிடுள்ளது. பிரான்கோ மீது முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாகவும் புகாருக்கான ஆதாரங்கள் வலுவாக இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரை கேரளாவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.பேராயர் முலக்கல்லுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தபோது, கேரளாவில் அதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications