வயநாடு நிலச்சரிவு- தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது- ராகுல், பினராயி விஜயன் கோரிக்கைக்கு பாஜக பதில்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் 360 பேரை பலி கொண்ட நிலச்சரிவு துயரத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கவே முடியாது என பாஜக மூத்த தலைவர் வி.முரளீதரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்பதற்கு விளக்கமும் தரப்பட்டது எனவும் வி.முரளீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட இடங்களில் 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

வயநாடு மலைப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
வயநாடு மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை இன்று பார்வையிட்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பது தொடர்பான சட்டரீதியான வாய்ப்புகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான வி.முரளீதரன், வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராகவே அறிவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள முரளீதரன், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்த முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், நிலச்சரிவு உள்ளிட்டவைகளை தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடம் இல்லை என நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதெல்லாம் தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமே இல்லை என்றார். அப்போது தேசியப் பேரிடர் அறிவிப்பு எப்போது சாத்தியம் என்கிற விவாதங்களும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications