திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலையை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆர்எஸ்எஸ் - பாஜக.. அரசியலாக்கப்பட்ட ஐயப்பன்!

சபரிமலை கோவில் நேற்று திறக்கப்பட்டு இருந்த போது கோவிலின் முழுக்கட்டுப்பாட்டையும் பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணிதான் கட்டுப்படுத்தியிருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலாக்கப்பட்ட ஐயப்பன்! ஆர்.எஸ்.எஸ்., பாஜக கட்டுப்பாட்டில் சபரிமலை

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நேற்று திறக்கப்பட்டு இருந்த போது கோவிலின் கிட்டத்தட்ட முழுக்கட்டுப்பாட்டையும் பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணிதான் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. சபரிமலை கோவில் நேற்று மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது.

    ஆனால் கோவிலுக்குள் ஒரு பெண் கூட கடைசி வரை நுழையவில்லை. இதற்கு பின்பாக அங்கிருந்த மக்களை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சேர்ந்து போராட தூண்டிவிட்டது அம்பலம் ஆகியுள்ளது. நேற்று இவர்கள் அந்த கோவிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    [மனைவியும் எம்எல்ஏ, முதல்வரும் எம்எல்ஏ.. கர்நாடக சட்டசபைக்கு இது புதுசு! ]

     பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டணி

    பாஜக ஆர்எஸ்எஸ் கூட்டணி

    சபரிமலை பிரச்சனையை பாஜகவும் ஆர்எஸ்எஸும் மிகவும் நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டது என்றுதான் கூற வேண்டும். சபரிமலை போராட்டத்திற்கு பின் முழுக்க முழுக்க இந்துத்துவா அமைப்புகள்தான் இருந்தது என்பதும் அம்பலம் ஆகியுள்ளது. இந்த போராட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஒருங்கிணைத்ததே அவர்கள்தான் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

     ஏற்கனவே என்ன செய்தனர்

    ஏற்கனவே என்ன செய்தனர்

    ஏற்கனவே சபரிமலை கோவில் பிரச்சனையை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லோரும் நம்மிடம் சரண் அடையும் நிலைக்கு ஆளாகிவிட்டனர் என்று கேரள பாஜக தலைவர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசும் வீடியோ வெளியாகி இருந்தது. சபரிமலை கோவில் பிரச்சனையை எப்படி அரசியலாக்க வேண்டும் என்று அவர் பேசியது இதில் பதிவாகி உள்ளது. இதில் இருப்பது தான்தான் என்றும் அவர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

     நேற்று என்ன நடந்தது

    நேற்று என்ன நடந்தது

    இந்த நிலையில்தான் நேற்று சபரிமலை கோவில் திறக்கப்பட்ட போதும் ஆர்எஸ்எஸ் - பாஜக இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியது. நேற்று கோவிலை அவர்கள் முழுக்கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள் என்றுதான் கூற வேண்டும். கேரளா ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த வல்சான் திலங்கேரிதான் நேற்று நடந்த அனைத்து போராட்டத்தையும் ஒருங்கிணைத்தது. கோவிலுக்குள் இவர் அனுமதி இன்றி யாருமே, போலீஸ் கூட, செல்ல முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

     கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    முதலில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்த ஆதிவாசி மக்களே இப்போது இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்கள். கோவிலில் தங்களுக்கு இருந்த உரிமையை பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள், கட்சிகள்தான் கைப்பற்றியது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கோவிலில் தங்களுக்கு மீண்டும் முழு உரிமை வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP and RSS took the full control Sabarimala left the Left over tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X