Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சி கொள்கை விதிப்படியே.. .ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.. சி.பி.ஐ(எம்) விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கட்சியின் கொள்கை விதிகளின்படியே ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கேரள சிபிஐ (எம்) மாநில செயல் செயலாளர் விஜயராகவன் தெரிவித்தார்.

Recommended Video

    Kerala புதிய அமைச்சரவையில் K K Shailja-விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.. மக்கள் அதிர்ச்சி

    சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அமோக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது.

    பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அரசின் அமைச்சரவை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    .ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு இல்லை

    .ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு இல்லை

    அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனை தவிர பழைய அமைச்சர்கள் யாருக்கும் மீண்டும் இடமில்லை.எல்லோருமே புதுமுகங்கள்தான். அமைச்சரவையில் ஷைலஜா டீச்சர் என்று அழைக்கப்படும் கேரள சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    'ராக்ஸ்டார்' சுகாதார அமைச்சர்

    'ராக்ஸ்டார்' சுகாதார அமைச்சர்

    உலக ஊடகங்களால் 'ராக்ஸ்டார் சுகாதார அமைச்சர்' என்று புகழப்பட்ட ஷைலஜா கொரோனா வைரஸ் காலத்தில் கேரள சுகாதாரத்துறையை உலக அளவில் கொண்டு சேர்த்தவர். இது தவிர நிபா வைரசை சிறப்பாக எதிர்க்கொண்டு அதனை விரட்டியடித்தவர். கேரள சுகாதாரத்துறையின் நடவடிக்கையை ஐ.நா அமைப்பே பாராட்டியது.

    மக்கள் கேள்வி

    மக்கள் கேள்வி

    இது தவிர சட்டமன்றத்தில் ஆளும் கட்சி ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் ஷைலஜா. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நபருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது ஏன்? என்றும் ஷைலஜாவுக்கு மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றும் பிரமுகர்கள் முதல் சாதாரண மக்கள் வரை வலியுறுத்தி வருகின்றனர். டுவிட்டரில் #bringourteacherback, # BringBackShailajaTeacher என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி ஷைலஜா டீச்சருக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    முக்கியத்துவம் வாய்ந்தவை

    முக்கியத்துவம் வாய்ந்தவை

    இந்த நிலையில் ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காதது கட்சியின் கொள்கைப்படி எடுத்த முடிவு என்று சிபிஐ (எம்) மாநில செயல் செயலாளர் விஜயராகவன் கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், ' கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, அரசியலும், அமைப்பும் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை. தற்போதைய முடிவும் இதற்கேற்றார்போல் தான் இருக்கிறது.

    கொள்கை விதிதான் காரணம்

    கொள்கை விதிதான் காரணம்

    சுகாதாரத் துறை அமைச்சரை அமைச்சரவையில் இடம் பெற செய்யாதது கட்சியின் அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த முடிவு. இதில் மறுபரிசீலனை செய்ய ஏதுமில்லை. இது தொடர்பாக கட்சி தலைமை ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது' என்று விஜயராகவன் தெரிவித்தார். பழையவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற சிபிஐ (எம்) கட்சியின் கொள்கை விதிகள் காரணமாக ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+