கேரளாவின் மாபெரும் சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி.. முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு
திருவனந்தபுரம்: கேரள மக்களின் கல்வி மற்றும் புதிய கலாச்சாரத்திற்கு அடிப்படை வித்திட்டவரான ஸ்ரீ நாராயண குருவின் 168வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
சாதி மதம் பேதமற்று அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என தனது வாழ்நாள் முழுவதும் கோயில்கள் கட்டியும் கல்வி நிலையங்களை கட்டியும் தொண்டாற்றிய சீர்திருத்தவாதிதான் ஸ்ரீ நாராயண குரு.
இவரின் இந்த 168வது ஜெயந்தி விழாவில் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றுள்ளார்.

168வது ஜெயந்தி
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டங்களில் கேரளம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கத்தில்தான் இருந்து வந்தது. அவர்களைத் தவிர வேறு யாரும் கல்வி கூட கற்கக்கூடாது எனும் கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இதனை எதிர்த்து அனைத்து சமூக மக்களுக்கும் கல்வியை கற்பித்தும் அவர்களுக்கான கல்வி நிலையத்தை உருவாக்கியவர்தான் ஸ்ரீ நாராயண குரு. இவரின் 168வது ஜெயந்தி விழா இன்று கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கல்வி
1855ல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள செம்பழந்தி கிராமத்தில் பிறந்த நாராயண குரு, சிறு வயது முதல் சமஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ் உள்ளிட்ட மொழிகளையும் கற்று தேர்ந்த அவர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கல்வியையும் கற்றார். நல்ல கூர்மையான கவனிப்பு திறன் கொண்டிருந்ததால் அவருக்கு கல்வி பசுமரத்தானிபோல மனதில் பதிந்தது. இதனையடுத்து தான் பெற்ற கல்வியை அனைவருக்கும் கொடுக்க நினைத்தார்.

தாக்கத்தை ஏற்படுத்தியவர்
ஆனால் கல்வி எல்லோருக்குமானதாக இருந்திருக்காத காலமது. ஆனாலும் அந்த கட்டுப்பாடுகளை உடைத்து கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க போராடினார். நாராயண குருவுக்கு ஆன்மீகத்திலும் நாட்டம் இருந்த காரணத்தினால் தான் சென்ற இடங்களில் கோயில்களையும் அவர் உருவாக்கினார். பின்னர், சிறு சிறு கோயில்களை இடித்துவிட்டு அந்த இடங்களில் கல்வி நிலையம் உள்ளிட்ட பொது கட்டிடங்களை ஏற்படுத்தினார். இது பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பினராயி விஜயன் பங்கேற்பு
இவ்வாறு கேரளத்தின் சீர்திருத்தவாதியாக ஸ்ரீ நாராயண குரு பரிணமித்தார். இந்நிலையில் இன்று அவரது இவரின் 168வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. செம்பழந்தி குருகுலத்தில் நடைபெறும் ஸ்ரீ நாராயண குரு மகா சம்மேளனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல முதன் முதலாக அவர் உருவாக்கிய கோயில் அமைந்துள்ள கேரளத்தின் சிவகிரியில் பேரணியும் மாநாடும் நடக்கின்றது. இம்மாநாட்டை மத்திய அமைச்சர் முரளிதரன் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications