ச்சே.. ராகுல் காந்திக்கு இப்படியொரு பிரச்சனையா? கேரளாவில் துவங்கிய ஆயுர்வேத சிகிச்சை! ஏன் தெரியுமா?
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு கேரளாவில் இன்று முதல் ஆயுர்வேத சிகிச்சை தொடங்கி உள்ளது. ஒருவாரம் வரை இந்த சிகிச்சையை பெறும் ராகுல் காந்திக்கு இருக்கும் பிரச்சனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக இருந்தார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். அப்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடி பெயர் குறித்து அவர் கூறிய தகவல் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத சிகிச்சை: இதற்கிடையே தான் தனக்கு விதிக்கப்பட்ட நிலையில் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி கேரளாவில் தங்கி இன்று முதல் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று முதல் அவர் இன்னும் ஒரு வாரம் அங்கேயே தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற உள்ளார்.
கோட்டக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதி சடங்கு கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்ப்ளி செயின்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி இன்று முதல் ஆயுர்வேத சிகிச்சையை பெற தொடங்கி உள்ளது. தற்போது ராகுல் காந்தி கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

மாதவன் குட்டி வாரியார்: ராகுல் காந்திக்கு அந்த வைத்தியசாலையின் தலைமை மருத்துவ நிபுணரான மாதவன் குட்டி வாரியரின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்திக்கு நேற்று முதல் சிகிச்சை தொடங்க இருந்தது. ஆனால் உம்மன் சாண்டி மறைவால் ஒரு நாள் கழித்து கோட்டக்கல் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சை தொடங்கி உள்ளது.
காரணம் என்ன: ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவுக்கான ஒற்றுமை பயணம் என பாரத் ஜோடோ யாத்திரை சென்றார். இந்த யாத்திரை மூலம் ராகுல் காந்தி சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவை கட்சி நிர்வாகிகளுடன் நடந்து கடந்தார். இதையடுத்து அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இந்த மூட்டு வலி குணமாகவே ராகுல் காந்தி கேரளாவில் தங்கி ஒரு வாரம் வரை ஆயுர்வேத சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications