திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலை விவகாரம்.. மீண்டும் கையில் எடுத்த காங்கிரஸ் கூட்டணி.. பினராயிக்கு சிக்கல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்). சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம் வயதுடைய பெண்கள் நுழைவதற்கு எதிரான பிரச்சினையை மீண்டும் எழுப்பி உள்ளது.

அண்மையில் 50வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அதனை திரும்ப பெற்றுக்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சியான கூட்டணியான காங்கிரஸ தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Congress-led opposition United Democratic Front attempts to resurrect Sabarimala issue

ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தலைவர் எம்.எம். ஹாசன், எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் பண்டைய கோவிலின் பழக்கவழக்கங்களை பாதுகாக்க சட்டத்தை கொண்டு வரும் என்றார்.

இந்த சட்டம் 10 வயதிற்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே சபரிமலை சன்னிதானத்தில வழிபாடு செய்ய அனுமதிக்கும் என்றார். இது பண்டைய கோயில் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் பாதுகாக்கும் மற்றும் பக்தர்களின் நலன்களை நிலைநிறுத்தும் என்றும் கூறினார்.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும் இதேபோன்ற கருத்தையே தெரிவித்தார்.

 கங்கை நதிபோல புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி - சபரிமலை பம்பையின் புராண கதை கங்கை நதிபோல புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி - சபரிமலை பம்பையின் புராண கதை

ஆதனால் பாஜக மாநில பொதுச் செயலாளர் எச்சரிக்கையுடன் பேசினார். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இந்த கட்டத்தில் ஒரு புதிய சட்டத்தை பற்றி பேசுவது அர்த்தமற்றது. சபரிமலை போராட்டத்தின் போது யுடிஎஃப் கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் கூட்டணியினர் யாரும் போலீசார் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது வழக்குகள் போடப்படவில்லை. ஆனால் பினராயி அரசாங்கத்தின் போலீஸ் அராஜகத்தை பா.ஜ.க. அதன் தலைவர்கள் சிறைகளிலும் காவல் நிலையங்களிலும் பல மாதங்களாக செலவிடுகிறார்கள். எனவே சபரிமலை பற்றி பேச யுடிஎஃப் (காங்கிரஸ் கூட்டணிக்கு) உரிமை இல்லை" என்றார்

English summary
The Congress-led opposition United Democratic Front (UDF) on Wednesday attempted to resurrect the issue of the entry of women of childbearing age into Sabarimala Ayyappa Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X