இந்தியாவின் முதல் தலித் பிரதமர் கார்கே.. சசி தரூர் ஒரே போடு! இந்தியா கூட்டணில கொளுத்தி போட்டுட்டாரே
திருவனந்தபுரம்: 2024 தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிகாலம் 2024 ஆம் ஆண்டுடன் நிறைவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டுக்கு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான வேலைகளில் தற்போது ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, என்சிபி, மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளன.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தலைமை தாங்கும் கட்சி எது என்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தால், மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் காந்தி காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
'இந்தியா' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அமைத்து உள்ள கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோ பார்க்கில் 'வே டாட் காம்' அலுவலகத்தை சசி தரூர் திறந்து வைத்தார். அங்கு தொழில்நுட்ப நிபுணர்களுடன் பேசிய அவர், "அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. எனவே வியப்பூட்டும் முடிவுகள் கிடைக்கும். இந்தியா கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இருந்தால் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவோ அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியோ பிரதமராக முன்னிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இது கூட்டணியாக உள்ளதால் முடிவுகள் வந்த பின்னரே அனைத்துக் கட்சிகளும் இணைந்து பிரதமர் யார் என்று தேர்வு செய்வார்கள். என்னுடைய யூகம் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி அல்லது மல்லிகார்ஜுன கார்கேதான். கார்கே பிரதமராக அறிவிக்கப்பட்டால் இந்தியாவின் முதல் தலித் பிரதமராக அவர் இருப்பார்." என்று தெரிவித்தார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications