கொச்சி சென்ற கப்பல் கவிழ்ந்தது.. மீட்பு பணி தீவிரம்.. கரை ஒதுங்கும் பொருட்களை தொட வேண்டாம் என அலர்ட்
திருவனந்தபுரம்: விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் சரிய தொடங்கியுள்ளது. இந்த விபத்தால், கப்பலில் உள்ள கண்டெய்னர்கள் கடலில் மூழ்க தொடங்கின. இந்த விபத்தில் இதுவரை 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான கண்டெய்னர் சரக்கு கப்பல் MSC ELSA 3- கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்க தொடங்கியது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், கடலில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட கப்பல், நேற்று இரவு 10 மணியளவில் சென்றடையும் என எதிபார்க்கப்பட்டது.

கப்பல் கவிழ்ந்தது
ஆனால், அரபிக்கடலில் இந்த கப்பல் மூழ்க தொடங்கியது. இந்த கப்பல் விபத்தின் போது கப்பலில் 24 பேர் இருந்ததாகவும் அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளுடன் தப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. கப்பலை மீட்கும் பணிக்காக 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் சென்றுள்ளன. கப்பலில் இருந்து 24 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமா?
கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளாகியிருக்கும் கப்பலில் 367.1 மெட்ரிக் டன் சப்லர் எரிவாயு எண்ணெயும் 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணையும் இருந்துள்ளது. தற்போது கப்பல் மூழ்க தொடங்கியிருப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து எண்ணய் கடலில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ரசாயன எண்ணெய் படலங்கள் கரை ஒதுங்கும் பட்சத்தில் அதன் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளது. இதனால், அரபிக் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
என்ன நடந்தது?
கப்பலில் பயணித்த சிப்பந்திகளில் மாஸ்டர் ரஷ்யாவை சேர்ந்தவர் ஆவார். ஏனைய 20 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர் உக்ரைன் மற்றும் ஒருவர் ஜர்ஜ்ஜியாவை சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:- சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், கப்பலின் நிர்வாக குழுவிடம் இருந்து உதவி கோரப்பட்டது. இதையடுத்து, இரண்டு கடற்படை கப்பல் மற்றும் ஒரு டார்னியர் போர் விமானம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications