சிக்கலாகும் காசர்கோடு முடிச்சு.. கேரளாவில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா.. 105 ஆக உயர்ந்த எண்ணிக்கை!
கேரளாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 105 ஆகியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 105 ஆகியுள்ளது. காசர்கோட்டில் தொடர்ந்து தீவிரமாக கொரோனா பரவி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் மகாராஷ்டிராவும், கேரளாவும் கொரோனா காரணமாக அதிகமாக பாதித்து இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 519 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா காரணமாக 10 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெற்று குணமாகி அதன்பின் ஒரே நாளில் மர்மமான முறையில் மும்பையில் பலியான நபரையும் சேர்த்து கணக்கிட்டால் இந்தியாவில் மொத்தம் 11 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா மூலம் மகாராஷ்டிராவில்தான் அதிக பேர் பாதித்து இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா நிலை என்ன
கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் மொத்தம் 107 பேர் பாதித்து இருக்கிறார்கள். மகாராஷ்டிராவிற்கு அடுத்து கேரளாவில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் கேரளாவில் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இன்று காசர்கோட்டில் மட்டும் 6 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. அதேபோல் கோழிக்கோட்டில் மொத்தம் 2 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது.

கேரளா நிலை
7 பேர் துபாயில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. துபாயில் இருந்து கேரளா வந்த இந்த 7 பேர் மூலம்தான் அங்கு தற்போது ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் தாங்கள் துபாய் சென்று வந்ததை மறைத்தாக கூறப்படுகிறது. இவர்கள் மூலம் பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காரணம் இதுதான்
அதேபோல் காசர்கோட்டில் கடத்தல் மன்னன் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது, இவர் தான் சந்தித்த நபர்கள் குறித்த விவரங்களை வெளியிட மறுக்கிறார். அதனால் இவரை தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்றும் அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் காசர்கோட்டில் தொடர்ந்து புதிய நோயாளிகள் அதிகமாக அட்மிட் ஆக காரணம் ஆகும்.

பெரிய கடத்தல் கும்பல்
அவர் தான் சந்தித்த நபர்கள் குறித்து சொல்ல மறுக்கிறார். அவர் உண்மைகளை சொன்னால் பெரிய பெரிய கடத்தல் கேக்குகளை காட்டிக்கொடுத்தது போல ஆகும். அதேபோல் சில எம்எல்ஏக்கள் கூட இதனால் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதனால் அவர் உண்மையை மறைக்கிறார். இன்று அட்மீட் ஆன 6 பேரில் 3 பேர் அவரின் நண்பர்கள். இதனால் காண்டாக்ட் டிரேசின் முறையில் நோயாளிகளை கண்டுபிடிப்பதில் கேரளா பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது.

நிதி ஒதுக்கீடு
இதுதான் அங்கு கொரோனா தீவிரம் அடைய காரணம் ஆகும். இந்த நிலையில் எர்ணாகுளம் அரசு மருத்துவமனை அப்படியே கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் அங்கு தனியார் நிறுவன கட்டிடங்கள், பயன்படுத்தப்படலாம் இருக்கும் கட்டிடங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவ தேவைகளை கவனிப்பதற்காக 4500 கோடி ரூபாய் முதல கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது .
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications