திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    பெரிய டீம்... கேரளாவில் அசத்தும் சைலஜா டீச்சர்

    இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இதுவரை இந்தியா முழுக்க மொத்தம் 843 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 751 பேர் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். 73 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    மொத்தம் 20 பேர் கொரோனா காரணமாக நாடு முழுக்க பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்தான் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.

    கேரளா தற்போதைய நிலை

    கேரளா தற்போதைய நிலை

    இந்தியாவில் தற்போது கேரளாவில்தான் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை 176 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 164 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

    எங்கு கொரோனா

    எங்கு கொரோனா

    கேரளாவில் காசர்கோட்டில்தான் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இன்று காசர்கோட்டில் இருந்து மட்டும் 34 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கண்ணூரில் இருந்து இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருச்சூர், கோழிக்கோடு, கொல்லத்தில் இருந்து தலா ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 5 ஆயிரம் பேருக்கு கேரளாவில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

    காசர்கோடு காரணம்

    காசர்கோடு காரணம்

    காசர்கோடு பகுதியில் இவ்வளவு தீவிரமாக கொரோனா பரவ காரணம் அங்கு காண்டாக்ட் டிரேசிங் முறை தோல்வி அடைந்ததுதான் என்று கூறுகிறார்கள். அங்கு யார் மூலம் யாருக்கு கொரோனா பரவியது என்று சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு தற்போது 'க்ளஸ்டர்' (Cluster) பரவல் வகையில் கொரோனா பரவி வருகிறது. அதாவது கொரோனா பாதித்த நபர் மூலம், அவரின் உறவினர்கள் எல்லோருக்கும் கொரோனா பரவுதல் ஆகும்.

    கேரளாவில் ஸ்டேஜ் 3 இல்லை

    கேரளாவில் ஸ்டேஜ் 3 இல்லை

    ஆனால் கேராளாவில் இன்னும் ஸ்டேஜ் 3 பரவவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தனது பேட்டியில், கேரளாவில் நிலைமை மோசமாகி வருகிறது. நாம் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நம்முடைய செயலை, பணிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும், என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus: 39 people in single day, So far 176 people affected with the pandemic in Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X