பரவும் கொரோனா.. கேரளாவில் 17.. புனேவில் 2.. கர்நாடகாவில் 4.. இந்தியாவில் 58 பேருக்கு வைரஸ் பாதிப்பு!
கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் முன்பை விட இப்போது 17% கூடுதல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா சீனாவில் மட்டும் கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,027 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
சீனாவில் 80,754 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். சீனாவில் 3,136 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. முன்பை விட சீனாவில் தற்போது வைரஸ் கொஞ்சம் மெதுவாக பரவி வருகிறது.

கேரளா எப்படி
இந்தியாவில், கேரளாவில் நேற்று முதல் நாள் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. பத்தினம்திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உறவினர்கள் 2 பேருக்கு வைரஸ் தாக்கியது. ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு வைரஸ் தாக்கி குணப்படுத்தப்பட்டது.

மேலும் எப்படி
இந்த நிலையில் கேரளாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் 4 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும் வைரஸ் தாக்கியுள்ளது. இதன் மூலம் கேரளாவில் குணப்படுத்தப்பட்ட 3 பேரோடு சேர்த்து 17 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எல்லோரும் தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புனே நிலை
அதேபோல் இன்று புதிதாக புனேவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரும் துபாய் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிராவில் இதன் மூலம் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூர் எப்படி
புதிய 3 கொரோனா பாதித்தவர்களும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு நேற்று கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications