கொரோனாவை படுவேகமாக கட்டுப்படுத்திய கேரளா- ஏப்.4-லிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் அதிரடி நடவடிக்கை
திருவனந்தபுரம்: நாட்டில் கேரளாவில்தான் கொரோனாவின் உக்கிரம் முதலில் அதிகமாக இருந்தது. ஆனால் தம்முடைய முழு வீச்சிலான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவின் தாக்கத்தை வெகுவேகமாக கட்டுப்படுத்திவைத்திருக்கிறது சபாஷ் கேரளா மாநில அரசு.
Recommended Video
மகாராஷ்டிராவும் கேரளாவும்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன. ஆனால் தற்போது நிலைமை வேறு. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 50% கேரளாவில் குணமடைந்தும் வருகின்றனர்.

இந்தியாவின் வேறு எந்த ஒரு மாநிலமும் செய்யாத மகத்தான சாதனை இது. கொரோனாவை கட்டுப்படுத்த முழு அளவிலான லாக்டவுன், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு நிவாரணப் பணிகள், மருத்துவ சேவைகள் என அரசு இயந்திரம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால்தான் கேரளாவில் சாதிக்க முடிந்தது.
தமிழகத்தில் இப்போதுதான் பேசுபொருளாக இருக்கிறது கொரோனாவை உடனுக்குடன் கண்டுபிடிக்கக் கூடிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதல்தான். அதுவும் நாட்டிலேயே தமிழகம்தான் ரேபிட் டெஸ்ட் சோதனை கருவிகளை வாங்கியதாகவும் அரசு சொல்கிறது. இன்னொரு பக்கம், தமிழகத்துக்கு வர வேண்டிய கருவிகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது; அமெரிக்காவுக்கு கொடுத்துவிட்டார்கள் என்கிறது தகவல்கள்.
உண்மையில் இந்த கருவிகள் இன்னமும் நமக்கு வரவே இல்லைதான். அதேநேரத்தில் கேரளாதான் இத்தகைய கருவியை பயன்படுத்தி சாதனை நிகழ்த்திய முதல் மாநிலமும் கூட.
கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கடந்த 4-ந் தேதியன்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், 2000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை கேரளா வாங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கருவியின் மூலமாக மட்டுமல்ல பிசிஆர் டெஸ்ட் மூலமாகவும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும் என விவரித்தும் இருக்கிறார். இந்த பேட்டியை டேக் செய்திருக்கும் சமூக ஆர்வலர் சுமந்த் சி ராமன், ஏப்ரல் 4-ல் கேரளா 2,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்திருக்கும் போது ஏன் இதர மாநிலங்கள் இதனை செய்யவில்லை என கேட்டிருக்கிறார்.
ஆம் உண்மையில் நல்ல கேள்விதான்-பாராட்டுக்குரியது கேரளா அரசு!
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications