Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி, கோதுமை, உப்பு, சோப்பு.. மொத்தமா பாக்கெட் போட்டு.. வீட்டுக்கே வந்து டெலிவரி.. அசத்தும் கேரளா!

தனிமைப்படுத்தப்பட்டோருக்கு இலவச பலசரக்கு சாமான்கள் வழங்கப்பட்டு வருகின்றன

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருப்போருக்கு இலவசமாகவே மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து அந்த மாநில அரசு உதவி செய்கிறதாம். இது தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Recommended Video

    இந்தியாவுக்கு வழிகாட்டி... கொரோனாவை கேரளா எதிர்கொண்டது இப்படி தான்

    கேரள மாநிலமும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம்தான். ஆரம்பத்தில் அங்குதான் அதிக அளவில் பாதிப்புகள் வர ஆரம்பித்தன. இதையடுத்து அதிரடியாக சுதாரித்த அந்த மாநிலம் தன்னிச்சையாகவே பல தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியது. இதன் விளைவு இன்று கேரளா கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

    coronavirus: kerala gov helps provides free groceries to the isolated people

    ஒற்றை இலக்கத்தில்தான் அங்கு புதிய நோயாளிகள் உருவாகிறார்கள். சிகிச்சை பெற்றுத் திரும்புவோர் அதிகரித்துள்ளனர். பலி எண்ணிக்கை அறவே நின்று போய் விட்டது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டுக்குப் போய் திரும்பியோர், அங்கிருந்து வந்தோர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு உதவியாக இலவசமாக மளிகைப் பொருட்களை தருகிறதாம் கேரள அரசு. குவாரன்டைன் கிட் என்று இதற்குப் பெயர்.

    கிட்டத்தட்ட ஒரு குடும்பத்துக்குத் தேவையான சகலவிதமான மளிகைப் பொருட்களும் அதில் உள்ளன. அரிசி, பருப்பு, மசாலாப் பொருட்கள், கோதுமை என எல்லாமே அதில் இடம் பெற்றுள்ளன. உப்பு,சோப்பு என எதையும் விடவில்லை. எல்லாமே அந்த பேக்கேஜில் இடம் பெற்றுள்ளன. அதை விட ஆச்சரியமாக இந்த பொருட்களின் பாக்கெட் எதிலும் அரசின் சின்னம் எதுவும் இடம் பெறவில்லை. குறிப்பாக முதல்வர் பினராயி விஜயன் படம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் இல்லை. அதாவது விளம்பரமே இல்லாமல் மக்களுக்காக இதைக் கொடுத்துள்ளனர்.

    இது கேரள மாநிலத்தினருக்கு மட்டுமல்லாமல், அந்த மாநிலத்திற்கு வெளியிலிருந்து வந்து குவாரன்டைன் செய்யப்பட்ட அனைவருக்குமே கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். எந்தப் பொருளுக்காகவும் வெளியில் யாரும் வரக் கூடாது. வந்தால் ஆபத்து என்பதால்தான் வீடு தேடி இந்தப் பொருட்களைக் கொடுக்கிறார்களாம். இது கேரள மாநிலத்தில் குவாரன்டைனில் இருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+