மிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா.. கேரளாவில் உச்சம் பெறும் கொரோனா.. பின் தொடரும் கர்நாடகா!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 118 ஆகியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 127 பேர் பாதித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 606 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 46 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது போக இந்தியாவில் மொத்தம் 10 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று காலை கொரோனா காரணமாக ஒருவர் பலியானார்.

வேகமாக முன்னேறும் கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் 51 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இன்று மட்டும் புதிதாக 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கர்நாடகாவில் பெங்களூரில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு கொரோனா குணப்படுத்தப்பட்டு வீட்டிற்கு சென்று உள்ளனர்.

மிக மோசம்
மகாராஷ்டிராவும், கேரளாவும் கொரோனா காரணமாக அதிகமாக பதித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா மூலம் மகாராஷ்டிராவில்தான் அதிக பேர் பாதித்து இருக்கிறார்கள். கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் மொத்தம் 127 பேர் பாதித்து இருக்கிறார்கள். இன்று மட்டும் அங்கு 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மகாராஷ்டிராவில் மொத்தம் 2 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா நிலை
மகாராஷ்டிராவிற்கு அடுத்து கேரளாவில் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் கேரளாவில் 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இன்று காசர்கோட்டில் மட்டும் 4 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. கேரளாவில் மொத்தமாக 118 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. இதுவரை 12 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 112 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எத்தனை பேர் இருக்கிறார்கள்
76,542 பேர் கொரோனா காரணமாக மொத்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 76,010 வீட்டு காவலில் இருக்கிறார்கள். 532 பேர் மருத்துமனையில் இருக்கிறார்கள். இன்று புதிதாக கொரோனா ஏற்பட்ட 9 பேரில் 4 பேர் துபாயில் இருந்து வந்தவர்கள். ஒருவர் லண்டனில் இருந்து வந்தவர். ஒருவர் பிரான்சில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications