திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலேசியாவில் இருந்து கேரளா வந்த இளைஞர்.. மர்ம மரணம்.. அதே அறிகுறி.. தொடரும் கொரோனா சோதனை!

மலேசியாவில் இருந்து கேரளாவிற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீர் என்று பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மலேசியாவில் இருந்து கேரளாவிற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீர் என்று பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Kerala winning against COVID -19 | கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை

    உலகம் முழுக்க கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது.

    இந்த வைரஸ் தோன்றி மூன்று மாதம் ஆகியும் இதன் வேகம் குறையவில்லை. இப்போதுதான் இந்த வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது. கடந்த மாதம் இந்த வைரஸ் கேரளாவிலும் பரவியது.

    இப்போது எப்படி

    இப்போது எப்படி

    கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2835 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 79251 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பரவியது. மூன்று பேருமே சீனாவில் வுஹன் நகரத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.முதலில் கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும், இன்னொரு மாணவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    எல்லோருக்கும் குணமானது

    எல்லோருக்கும் குணமானது

    அதன்பின் கேரளாவில் சீனாவில் இருந்து வந்த இன்னொரு இளைஞருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 2239 பரிசோதனை செய்யப்பட்டு வந்தனர். கடையில் கேரளாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்த மூன்று பேரும் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கடைசியாக நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதில் மூன்று பேரும் இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக மலேசியாவில் இருந்து கேரளாவிற்கு வந்த இளைஞர் ஒருவர் திடீர் என்று பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு மொத்தம் 45 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்த நிலையில் அங்கிருந்து கேரளா வந்தவர் திடீர் உடல் நலக்குறைவால் பலியாகி உள்ளார். இவர், விமான நிலையத்தில் சோதிக்கப்பட்ட போது எந்த வைரஸ் தாக்குதலும் இல்லை.

    வீட்டிற்கு போன பின்

    வீட்டிற்கு போன பின்

    அதன்பின் வீட்டிற்கு சென்றவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், நிமோனியா, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் அப்படியே கொரோனா வைரஸ் அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிகுறியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இவர் பலியானார். கேரளாவை இந்த சம்பவம் பெரிய பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

    இல்லை

    இல்லை

    ஆனால் இவரின் ரத்தத்தை முதற்கட்டமாக பரிசோதனை செய்ததில் இவருக்கு கொரோனா இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரின் அறிகுறி அப்படியே கொரோனா வைரஸ் அறிகுறி போலவே இருக்கிறது. இதனால் அவரின் ரத்த மாதிரிகளை மீண்டும் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். அவரின் உடலை இறுதி சடங்கு செய்யாமல் தற்போது தனி பதப்டுத்தப்பட்ட அறையில் வைத்துள்ளனர்.

    English summary
    Coronavirus: Man who returned from Malaysia dies in Kerala, the Second test going on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X