கொரோனா.. 10 மீட்டர் இடைவெளி.. ஒருவரை ஒருவர் தொடாத குடிமகன்கள்.. போதையிலும் மல்லூஸ் செம உஷார்!
கேரளாவில் மதுக்கடைகளில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடாமல் 10 மீட்டர் இடைவெளி விட்டு நின்று மது வாங்கும் புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் மதுக்கடைகளில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடாமல் 10 மீட்டர் இடைவெளி விட்டு நின்று மது வாங்கும் புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தவோ அல்லது முன்னெச்சரிக்கையாகவே இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சில தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேரளாவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அங்குதான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது.

கேரளா கட்டுப்பாடு
இந்த நிலையில் கேரளாவில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் முதலில் கேரளாவில்தான் இந்த வைரஸ் தாக்கியது. அங்கு 3 பேருக்கு வைரஸ் தாக்கிய நிலையில் அவர்கள் குணப்படுத்தப்பட்டனர். கேரளாவில் நோய் அறிகுறிகள் இருக்கும் 1900 பேரை அம்மாநில அரசு தனிமைப்படுத்தி உள்ளது. இதில் 1750 பேர் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பள்ளிகள் எப்படி
கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அங்கு 8ம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சத்துணவு வீடு தேடி வழங்கப்பட்டு வருகிறது. கேரளா வரும் எல்லாம் ரயிலிலும் இருக்கும் எல்லா சுகாதார பெட்டிகளும், சுகாதாரத்துறை மூலம் சோதனை செய்யப்படுகிறது. கொரோனாவிற்கு எதிரான பணிகள் அங்கு சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
|
மதுபான கடைகள்
கேரளாவில் மதுபான கடைகள் மூடப்படவில்லை. ஆனால் பார்கள் மட்டும் மூடப்பட்டுள்ளது. பொதுவாக மலையாளிகள் மதுபான பிரியர்கள். அவர்கள் வீட்டில் மதுக்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வதில் விருப்பமானவர்கள். ஆனால் கொரோனா காரணமாக மக்கள் வெளியே செல்ல அச்சம் தெரிவிக்கிறார்கள். அங்கு மதுபான கடைகளில் இதனால் கூட்டம் குறைந்துள்ளது.
|
மக்கள் கூட்டம்
அதே சமயம் மதுபான கடைகளில் மது வாங்கும் மக்கள் கூட ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக இல்லாமல் தனியாக நின்று மது வாங்குகிறார்கள். ஒருவரை ஒருவர் தொடாமல் 10 மீட்டர் இடைவெளி விட்டு நின்று மது வாங்குகிறார்கள். கேரளாவில் மது பிரியர்கள் இவ்வளவு ஒழுக்கத்தை கடைபிடிப்பது மக்கள் மத்தியில் பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications