Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“என்னை மன்னிச்சு விட்ருங்க.. நான் படிக்கணும்”.. காதலனை கொலை செய்த கிரீஷ்மா கோர்ட்டில் கதறல்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காதலியே காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில், மாணவி கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் தனக்கு மன்னிப்பு வழங்கக் கோரினார் கிரீஷ்மா. தண்டனை விவரங்கள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் குமரி மாவட்டத்தை ஒட்டி பாறசாலை பகுதியில் கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜ், கிரீஷ்மா என்ற பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் ஷாரோன் ராஜுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் 11 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார்.

kerala greeshma sharon raj

ஷாரோன் ராஜ் கொலை

இதற்கிடையே ஷாரோன் ராஜ் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை வளையத்துக்குள் கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகிய மூவரும் கொண்டு வரப்பட்டனர். மேலும், விசாரணையில் கிரீஷ்மா தான் ஷாரோன் ராஜுக்கு விஷம் வைத்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

கிரீஷ்மா தன் வீட்டில் பார்த்த ராணுவ வீரரை திருமணம் செய்ய நினைத்துள்ளார். அதற்கு இடையூறாக இருப்பார் என நினைத்து தனது காதலன் ஷாரோன் ராஜை தன் வீட்டிற்கு வரவழைத்து, ஜூஸில் அதிகளவில் மாத்திரை கலந்து கொடுத்து அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

கஷாயத்தில் விஷம்

அதனால் உடல்நலம் பாதித்த ஷாரோன் ராஜ் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்துள்ளார். கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த பிறகு தான் ஷாரோன் ராஜுக்கு தீவிர உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜ் உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாட்கள் கழித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கைதான கிரீஷ்மா கடந்த ஓராண்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். மேலும், போலீஸ் காவலில் இருந்தபோது அவர் தற்கொலைக்கும் முயன்றார். இதனிடையே இந்த வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கிரீஷ்மா குற்றவாளி

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர், கொலை (பிரிவு 302) உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் கிரீஷ்மாவை குற்றவாளி என அறிவித்தார். அவரது மாமா நிர்மலகுமாரன் நாயரும் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். கிரீஷ்மாவின் தாயார் சிந்து போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.

இன்று கோர்ட்டில் ஆஜர்

நீதிபதி ஏ.எம்.பஷீர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தண்டனை தொடர்பான வாதங்கள் தொடங்கியது. கிரீஷ்மா காலை 11 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு நீதிபதி தீர்ப்புக்கு முன் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அவர், எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டார்.

மன்னிப்பு கேட்ட கிரீஷ்மா

கிரீஷ்மா, தனக்கு வெறும் 24 வயது தான் ஆகிறது என்றும், கிரிமினல் பின்னணி இல்லாததால், தனது கல்வியைத் தொடர விரும்புவதாகவும் கூறி, அதிகபட்ச மன்னிப்புக்காக முறையிட்டார். அவர் தனது கல்விச் சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கொடூர செயல் - மரண தண்டனை விதிக்க வேண்டும்

ஷாரோன் கொலை வழக்கு மரண தண்டனை அளிக்கும் தண்டனைக்குரிய அரிதினும் அரிதான வழக்குகளில் ஒன்றாகும் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. கிரீஷ்மா ஒரு இளைஞனை கொலை செய்த சாதாரண வழக்கல்ல இது, அன்பான ஒருவரின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து, அவரைக் கொன்றது கொடூரமானது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

கிரீஷ்மா, ஷாரோனை பொய்யான காரணம் சொல்லி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். முதல் முயற்சியில் ஷாரோனை கொல்ல திட்டமிட்டு, தோல்வியடைந்த பிறகு, கொலையை கவனமாகத் திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளார். ஷாரோன் இறப்பதற்கு முன் 11 நாட்கள் மிகக் கடுமையான உடல் கோளாறுகளைச் சந்தித்ததை மருத்துவர்களின் அறிக்கைகள் தெளிவுபடுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

போட்டோவை வைத்து மிரட்டினார்

ஷாரோனை விஷம் கொடுத்து கொன்று, அந்த இளைஞனின் எதிர்காலத்தையும், கனவையும் சிதைத்துவிட்டு, கிரீஷ்மா எந்த வருத்தமும் இன்றி அவரிடம் நாடகமாடியுள்ளார், எனவே மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு, கீரீஷ்மா தரப்பில், கிரீஷ்மா மன உளைச்சலை எதிர்கொண்டு, ஷரோனுடனான தனது உறவை முறித்துக் கொள்ள பலமுறை முயன்றதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுத்து மிரட்டல் விடுத்ததாகவும் வாதம் வைத்தனர்.

ஷரோன் தன்னை மிரட்டுவதற்காக தனிப்பட்ட போட்டோக்களைப் பயன்படுத்தியதாகவும், நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை (ஜனவரி 20) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+