வேறு ஜாதி காதல்.. மகள் கர்ப்பம்.. பேரனை பிரித்து அராஜகம்.. சிக்குகிறார் கம்யூனிஸ்ட் விஐபி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அனுபமா மற்றும் அஜித்தின் ஆண் குழந்தைக்கு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ஒரு வயது ஆனது. ஆனால், முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்குப் பதிலாக, குழந்தை எங்கே இருக்கிறார் என்று சோகத்துடன்தேடிக்கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்.

கடந்த அக்டோபர் 19, 2020 அன்று அனுபமா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் பிறந்த குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டார். குழந்தையை வலுக்கட்டாயமாக பிரித்தது வேறுயாருமல்ல அனுபமாவின் அப்பா ஜெயச்சந்திரன் தான். அவர் கேரளாவை ஆளும் சிபிஎம் கட்சியின் முக்கிய நிர்வாகி ஆவார்.

அவரது தந்தை ஜெயச்சந்திரன் பேரூர்கடை சிபிஐ(எம்) கட்சியின் உள்ளூர் கமிட்டி உறுப்பினராகவும், திருவனந்தபுரம் சென்டர் ஆஃப் இந்தியா டிரேட் யூனியன்ஸ் (சிஐடியு) பொதுச் செயலாளராகவும் உள்ளார். மகளிடம் இருந்து குழந்தையை பிரித்த ஜெயச்சந்திரன் அதை தத்து கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு அந்த குழந்தை எங்கிருக்கிறது என்பது குறித்து தகவல் இல்லை. குழந்தையை பிரிந்த நாளில் இருந்து அனுபமா, தன் மகனை தேடுவதில் தான் ஒவ்வொரு நாளும் செலவழித்து வருகிறார்.

மார்க்சிஸ்ட் தலைவர்

மார்க்சிஸ்ட் தலைவர்

இதனிடையே ஜெயச்சந்திரன் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதால் அவரை கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு பாதுகாக்கிறது என்று அனுபமாவும் அஜித்தும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனிடையே, ஜெயச்சந்திரன் குழந்தையை தத்து கொடுப்பதற்காக சென்றது கேமராவில் உறுதியானது. இதுபற்றி அவரிடம் கேட்ட போது தனது மகள் அனுபமாவின் சம்மதத்துடன் தான் இதைச் செய்ததாக அவர் கூறுகிறார். மேலும் மகள் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அவர் கையெழுத்திட்ட ஒரு குறிப்பு ஒன்று தன்னிடம் உள்ளது என்றும் கூறினார்

 குழந்தை நலக்குழு

குழந்தை நலக்குழு

ஆனால். அனுபமாவும் அஜீத்தும் தங்கள் குழந்தையை விட்டுக்கொடுக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை என்கிறார்கள். ஜெயச்சந்திரனிடமிருந்து தத்தெடுப்பதற்காக ஒரு குழந்தையையும் பெறவில்லை என்று மாநிலத்தில் குழந்தைகள் நலக் குழு கூறுகிறது. காவல்துறை புகார்கள் இருந்தாலும், ஜெயச்சந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் பரிசீலிக்கப்படுவதற்கான ஒரு தகவலும் இல்லை-

காதல் குழந்தை

காதல் குழந்தை

இது தொடர்பாக ஆங்கில ஊடகமான நியூஸ் மினிட்ஸ் வெளியிட்ட செய்திகளின் படி, திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடாவில் வசிப்பவர் ஜெயச்சந்திரன் மகள் அனுபமா இவர் அஜித் என்பவரை காதலித்துள்ளார். நெருக்கமாக பழகியதால் 2020 ல் கர்ப்பமானார். கர்ப்பத்தை தனது பெற்றோருக்கு அனுபமா வெளிப்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் காதல் விவகாரம் தெரிந்ததால் அஜித்துடனான உறவை கடுமையாக எதிர்த்தனர். அனுபமாவும் அவரது குடும்பமும் ஈழவா சாதியைச் சேர்ந்தவர்கள், அஜித் ஒரு தலித் கிறிஸ்தவர். மேலும் அவர் அந்த நேரத்தில் திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தார். கர்ப்பத்தின் எட்டாவது மாதத்தில், அஜித்தும் அனுபமாவும் அவளுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்ததால், பெற்றோருக்கு உண்மையை வெளிப்படுத்தினர்.

பிறகு பார்ப்போம்

பிறகு பார்ப்போம்

அனுபமா இதுபற்றி கூறும் போது, அனுபமாவின் சகோதரியின் திருமணம் சில மாதங்களுக்குப் பிறகு நிச்சயிக்கப்பட்டது. அதை கவனிப்போம். பின் உன் விவகாரத்தை பார்ப்போம் என்று என் பெற்றோர் என்னிடம் சொன்னார்கள், அவர்கள் எனக்கும் என் குழந்தைக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள் என்று சொன்னார்கள், நான் அவர்களுடன் செல்ல ஒப்புக்கொண்டேன் என்றார்.

மருத்துவமனை

மருத்துவமனை

அதன்பிறகு அஜித் கூறும் போது, அனுபமா தனது பெற்றோருடன் திரும்பிச் சென்ற தருணம், அவர்களின் அணுகுமுறை மாறியது. அவர்கள் அனுபமாவை மலப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய முயன்றனர், ஆனால் என் மனைவி கடுமையாக எதிர்த்தார். இதனிடையே கொரோனா வைரஸ் பாதித்ததால் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என் மனைவி குணமடைந்ததும், நான் அவளை என்னுடன் அழைத்துச் சென்றேன். போலீசாரும் தலையிட்டு, விரும்பும் யாருடனும் போகலாம் என்று கூறினார்கள். எவ்வாறாயினும், தந்தைக்கு இருதய நோய் இருப்பதாகவும், அவர்கள் அனுபமாவை வீடு திரும்ப விரும்புவதாகவும் அவரது தாயார் கெஞ்சினார். நான் ஏற்கவில்லை என்றார்.

சிசேரியன்

சிசேரியன்

இதனிடையே பிரசவ தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன், அனுபமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அனுபமாவை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை, அதற்கு பதிலாக அவரது அப்பாவின் நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

கொடுமை

கொடுமை

அனுபமாவின் அப்பா, அம்மா, சகோதரி மற்றும் , குழந்தையுடன் சென்றார்கள். அங்கு திருமணத்திற்குப் பிறகுதான் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று அனுபமாவிடம் இருந்து குழந்தையை பறித்துள்ளார்கள் . அனுபமாவின் தந்தையின் நண்பரின் வீட்டில் அறையில் அடைத்து வைத்து யாரிடமும் பேச விடாமல் தடுத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் குழந்தையை பார்க்க முடியவில்லை. இன்னொரு பக்கம் காதலனையும் பார்க்கவிடவில்லை.

புகார் கொடுத்தார்

புகார் கொடுத்தார்

இதனிடையே வேறு ஜாதி பையனுடன் உறவு ஏற்பட்டு பிறந்த குழந்தை என்பதால் அதை மறைக்க விரும்பிய ஜெயசந்திரன், அந்த குழந்தையை மூன்று நாளில் தத்து கொடுத்துவிட்டார். அனுபமாவின் ஒப்புதலுடனே கொடுக்கப்பட்டதாக ஜெயச்சந்திரன் கூறினார். தனது தந்தையின் செயலால் கொதித்து போன அனுபமா காவல்துறை உயர் அதிகாரிகளிடம்புகார் அளித்து போராடினார். அதன்பின்னர் முதல்வர் பினராயி விஜயனுக்கும் புகார் அனுப்பினார். கடைசியில் கேரள மாநில ஆளுநரிடமும் அனுபமா குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி புகார் கொடுத்தார்.

எங்கு குழந்தை

எங்கு குழந்தை

கடும் போராட்டத்திற்கு பின் புகாரின் மீது விசாரணை நடத்த 6 மாதங்களுக்குபின் கேரள போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் ஊடகங்களில் விவகாரம் தீவிரமான நிலையில் குழந்தை காணாமல் போன விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அனுபமாவின் குழந்தை 'அம்மாதொட்டில்' திட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இப்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. யார் தத்து எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+