வாட்ஸ் ஆப்பில் மூழ்கிப் போன தாய்.. பாலுக்கு அழுத குழந்தையின் வாயைப் பொத்தி.. பரிதாப சம்பவம்!
கேரளாவில் 15 மாத குழந்தையின் வாயை இளம் தாய் பொத்தி கொன்றுள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: "குழந்தை பாலுக்கு அழுதுட்டே இருந்தது.. நான் வாட்ஸ்அப்-லேயே ரொம்ப மூழ்கி போயிட்டேன்.. குழந்தை சத்தம் ரொம்ப தொந்தரவா இருந்தது.. அதனாலதான் வாயை பொத்திட்டேன்.. குழந்தை செத்து போச்சு" என்கிறார் இளம் தாய் ஆதிரா!
கேரளா மாநிலம் சேர்த்தல பட்டினங்காடு கொல்லம் வெளி காலனியை சேர்ந்தவர் ஷரோன். இவர் ஆதிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆதிராவுக்கு வயது 24 ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி இரவு "என் குழந்தை கட்டிலில் விழுந்து விட்டாள், பேச்சு மூச்சையே காணோம்" என்று சொல்லி ஊரையே கத்தி கூப்பிட்டு ஒப்பாரி வைத்து அழுதார் ஆதிரா.

காயம் இல்லை
கட்டிலில் இருந்து குழந்தை விழுந்திருந்தால், அதன் உடம்பில் சின்ன காயமாவது ஏற்பட்டிருக்க வேண்டும். அது எதுவுமே இல்லை என்பதால்தான் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். ஆனால் குழந்தை மூச்சு திணறி இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இதனால் சந்தேகம் அதிகமானது. விஷயம் போலீசுக்கு போனது.

வாட்ஸ்அப்
பின்னர் ஆதிராவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை ஆரம்பமானது. அப்போது அவர் சொல்லும்போது, "ராத்திரி 12.30 மணிக்கு நான் செல் ஃபோனில் வாட்ஸ் அப்ல என் ஃப்ரெண்டுக்கு மெசேஜ் அனுப்பிட்டு இருந்தேன். அப்பதான் குழந்தை பாலுக்கு அழுதது. கொஞ்ச நேரம் கழிச்சு பால் தரலாம்னு இருந்தேன்.

தொந்தரவு
ஆனாலும் குழந்தை விடாமல் சத்தமா அழுதது. அதனால் எனக்கு மெசேஜ் அனுப்ப முடியல. ரொம்ப தொந்தரவா இருந்தது. உடனே நான் குழந்தை சத்தம் வெளியே கேட்காமல் இருக்க அதன் வாயை ஒரு கையால் இறுக்கி பொத்தினேன்.

இறந்துவிட்டது
இன்னொரு கையில் வாட்ஸ்அப் மெசேஜ் பார்த்து கொண்டிருந்தேன். வாட்ஸ்அப்லயே மூழ்கி போயிட்டதால குழந்தையின் வாயிலிருந்து கையை எடுக்க மறந்துட்டேன். அதனால குழந்தை இறந்துவிட்டது" என்றனர். இதையடுத்து ஆதிராவை போலீசார் கைது செய்துள்ளனர்
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications