அதி தீவிர புயல் டூ சூப்பர் புயலாக மாறிய பைபர்ஜாய்.. கடலில் வலுவிழக்குமா.. எங்கே கரையை கடக்கும்?
திருவனந்தபுரம்: அரபிக் கடலில் நிலைக் கொண்டிருந்த அதி தீவிர புயலான பைபர்ஜாய் தற்போது சூப்பர் புயலாக மாறியதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் ஜூன் 15 ஆம் தேதி கரையை கடக்கும்.
இதுகுறித்து வானிலை மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பைபர்ஜாய் என்ற அதி தீவிர புயல் ஜூன் 10 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கிழக்கு- மத்திய அரபிக் கடலில் அருகில் மையம் கொண்டிருந்தது.

மேலும் தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு நோக்கி நகரக் கூடும் என தெரிவித்துள்ளது. இந்த பயங்கரமான புயல் தங்கள் நாட்டில் கரையை கடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் சிந்து மற்றும் பலுசிஸ்தானில் உள்ள கடலோர பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உஷாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கராச்சியிலிருந்து 1,120 கி.மீ. தொலைவில் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையே உள்ள அதே தூரத்தில வெள்ளிக்கிழமை அமைந்திருந்தது என பாகிஸ்தான் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் உள்ள போர்பந்தர் கிர் சோம்நாத் மற்றும் வல்சாத் ஆகிய இடங்களில் தலா ஒரு குழுமை நிறுத்தவுள்ளது. இந்த புயலால் அடுத்த இரு தினங்களுக்கு குஜராத்தில் ஒரு சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும். இரு நாட்களுககு பிறகு சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் முதலில் தெற்கு- தென் மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் இரு தினங்களுக்கு பிறகு வடக்கு- வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கும். இரு நாட்களுக்கு பிறகு குஜராத்தின் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். புயல் எங்கு கரையை கடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த தென்மேற்கு பருவமழை சீசனில் உருவான முதல் புயல் பைபர்ஜாய் புயல். இதற்கு வங்கதேசம் பெயரிட்டுளளது. இந்த பெயருக்கு வங்கத்தில் பேரழிவு என்பது பொருளாகும். மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க சென்றிருந்தால் அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பைபர்ஜாய் புயல் இன்று அல்லது நாளை தெற்கு குஜராத்தை அடையலாம் என்பதால் மாநில பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மிக தீவிர புயலான பைபர்ஜாய் புயல் போர்பந்தரிலிருந்து 480 கி.மீ. தூரத்திலும் துவாரகாவிலிருந்து 530 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இந்த புயல் தற்போது அதி தீவிர புயலாக வலுவடைந்தது. இதையடுத்து தற்போது சூப்பர் புயலாக மாறிவிட்டது. கடலிலேயே வலிவிழக்கும் இந்த புயல் இந்தியா- பாகிஸ்தான் இடையே வரும் ஜூன் 15 ஆம் தேதி கரையை கடக்கும். கரையை கடக்கும்போது வலிவிழந்து அதி தீவிர புயலாக மாறும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் நேரடியாக இந்தியாவை தாக்காது என்றும் இந்திய கடல் பகுதியில் கரையை கடக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைபர்ஜாய் எங்கள் கடல் பகுதிக்கு வராது என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் அந்த புயல் பாகிஸ்தான் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications