ஷாக்.. வாழவே விட மாட்டீங்களா.. பெற்ற தகப்பனை கம்பாலேயே அடித்து கொன்ற மகள்.. காதலனும் உடந்தை!

பெற்ற தகப்பனை காதலனுடன் சேர்ந்து மகள் கொலை செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காதலனுடன் வாழ விடாமல், அடிக்கடி தகராறு செய்த தந்தையை பெற்ற மகளே தீர்த்து கட்டிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

கேரள மாநிலம் இலவம்திட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவருக்கு வயசு 55. கல்யாணமாகி ஒரு மகள் இருக்கிறார். சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்.. நல்ல காசு.. ஒரே மகள் என்பதால் ரொம்பவும் செல்லம்!

இந்நிலையில் மகள் ஒரு பிரைவேட் பஸ்ஸின் டிரைவரை லவ் பண்ணினார். விஷயம் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. அம்மா எவ்வளவோ கண்டித்தும் மகள் காதலை விடவே இல்லை. அதனால் வெளிநாட்டில் உள்ள சஜீவிடம் சொன்னார். விஷயத்தை கேள்விப்பட்டதும் சஜீவ் ஊருக்கே திரும்பி வந்துவிட்டார். காதலை கைவிடுமாறு சஜீவ் சொல்லியும் மகள் கேட்கவே இல்லை.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அம்மா, அப்பா இருவருமே காதலை எதிர்ப்பதால், வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு, பஸ் டிரைவருடன் ஓடிபோய் விட்டார் மகள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சஜீவ் போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை நடத்தி, மகளையும், பஸ் டிரைவரையும் கண்டுபிடித்து ஸ்டேஷனுக்கு பேச்சுவார்த்தைக்காக வரவழைத்தனர்.

கண்ணீர்

கண்ணீர்

மகளை பார்த்ததும், தன்னுடன் வந்துவிடுமாறு தந்தை கண்ணீர் விட்டு சொன்னார். ஆனால் மகள் போலீசாரிடம், காதலனை கல்யாணம் செய்து கொண்டதாகவும், தான் ஒரு மேஜர் என்றும், வாழ அனுமதிக்குமாறும் சொன்னார். இதையடுத்து, போலீசாரும் அவர்களை விடுவித்துவிட்டனர்.

தொந்தரவு

தொந்தரவு

ஆனால் சஜீவ்-க்கு மனசு ஆறவே இல்லை. மகளை விட்டு பிரியவும் மனம் இல்லை. அதனால் இதற்கெல்லாம் காரணமான காதலனை அடிக்கடி சந்தித்து தகராறும் தொந்தரவும் செய்துள்ளார். இது காதலனுக்கு ஆத்திரத்தை தந்துள்ளது. இதையடுத்து ஒருநாள், காதலன், மகள், மற்றும் இன்னொரு நண்பர் என 3 பேரும் சேர்ந்து சஜீவின் வீட்டிற்கு சென்றனர். அந்த நேரத்தில் சஜீவ் மட்டும்தான் வீட்டில் இருந்தார். கையில் தயாராக கொண்டு வந்திருந்த கம்பால் சஜீவை சரமாரியாக தாக்கினார்கள்.

உயிரிழந்தார்

உயிரிழந்தார்

ரத்தவெள்ளத்தில் சஜீவ் கீழே விழுந்ததும் மகள் உட்பட 3 பேருமே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து சஜீவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் பலன் இல்லை. அங்கேயே உயிர் பிரிந்தது. இதையடுத்து போலீசார் மகள் உட்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள். ஆசை ஆசையாக வளர்த்த தந்தையை பெற்ற மகளே போட்டு தள்ளியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் இணையதளங்களில் வேகமாக பதிவிடப்பட்டும் வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+