இந்தியாவில் முதல் முறை! சாமானிய நபருக்கு புனிதர் பட்டம்.. அடுத்த ஆண்டு போப் ஆண்டவர் வழங்குகிறார்!
திருவனந்தபுரம்: இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவத்திற்கு மதம் மாறிய 18 ஆவது நூற்றாண்டை சேர்ந்த இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு அடுத்த ஆண்டு முதல்முறையாக புனிதர் பட்டத்தை போப் ஆண்டவர் வழங்குகிறார்.
இதுவரை கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள், பிஷப் போன்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த புனிதர் பட்டம் முதல்முறையாக இந்தியாவை சேர்ந்த சாதாரண நபருக்கு போப் ஆண்டவர் வழங்கவுள்ளார்.

தேவசகாயம் பிள்ளை உள்பட உலகளவில் 6 பேருக்கு மே 15 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு வாடிகன் நகரில் புனித பீட்டர் தேவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்கவுள்ளார்.
இதற்கான முறையான அறிவிப்பை வாடிகனில் உள்ள புனிதர்கள் திருச்சபை கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. முதலில் யார் இந்த தேவசகாயம் பிள்ளை என்பதை பார்ப்போம். கடந்த 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நட்டாளத்தில் இந்துவாக நாடார் சமூகத்தில் பிறந்தார் தேவசகாயம் பிள்ளை.
இவர் கிறிஸ்துவ மதத்தின் போதனைகளை கேட்டறிந்து அந்த மதத்தின் மீது பற்றுக் கொண்டு 1745 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் இணைந்தார். தனது பெயரை லாசரஸ் என மாற்றிக் கொண்டார். தேவசகாயம் அல்லது லாசரஸ் என்ற பெயருக்கு கடவுளின் தூதுவர் அல்லது உதவியாளர் என்பது பொருளாகும்.
இவர் தனது சொற்பொழிவில் ஜாதி , மத பாகுபாடின்றி அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி வந்தார். இது உயர் ஜாதியினரின் கோபத்திற்கு ஆளானது. இதையடுத்து அவர் 1749 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் மிகவும் கஷ்டப்பட்ட அவர் 1752 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தகவலை வாட்டிகன் செய்திக் குறிப்பு கூறியுள்ளது.
தேவசகாயத்தின் வாழ்க்கை தொடர்பான காட்சிகள், இடங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் டயோசிஸுக்கு உள்பட்ட இடங்களில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அதாவது டிசம்பர் 2ஆம் தேதி சுமார் 300 ஆண்டுகளுக்கு பின்னர் தேவசகாயம் போப் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு புனிதராகவும் அறிவிக்கப்படுகிறார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications