கேரளா சட்டசபையில் தமிழில் பதவியேற்பு.. யார் இந்த தேவிகுளம் காங்கிரஸ் எம்எல்ஏ? பின்னணி
திருவனந்தபுரம்: கேரளாவில் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜா தமிழில் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் தமிழில் பதவியேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

கேரளா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் விடி சதீசன் பொறுப்பேற்றார். இதையடுத்து எம்எல்ஏக்கள் பதவியேற்பு நேற்று கேரளா சட்டசபையில் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய எம்எல்ஏக்களின் பதவியேற்பு மதியம் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது. எம்எல்ஏக்கள் கடவுளின் பெயரிலும், உளமார என கூறியும் பதவியேற்று கொண்டனர்.
தற்காலிக சபாநாயகரான சுதாகரன் முன்னிலையில் அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களும் பதவியேற்று கொண்டனர். அப்போது தேவிகுளம் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ எஃப் ரவி தமிழில் பதவியேற்று கொண்டார்.
அவர், ''சட்டமன்ற பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஃப் ராஜா எனும் நான் சட்ட முறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்துவேன் என்றும், நான் இப்போது மேற்கொள்ள இருக்கும் கடமையை உண்மையாகவும், நேர்மையாகவும் நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரில் உறுதியளிக்கிறேன்'' என்று பதவியேற்று கொண்டார்.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவர் வென்ற தேவிகுளம் சட்டசபை தொகுதி இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. இவர் மொத்தம் 50,590 வாக்குகள் பெற்று வாகை சூடினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏவான ஏ ராஜா 45,357 ஓட்டுகள் பெற்றார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் எஃப் ராஜா 5,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் பாஜகவின் எஸ் ராஜேந்திரன் 15,032 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications