"கள்ளு" குடித்த பெண்.. பக்கத்தில் யார் பாருங்க.. பாரில் பாட்டிலை திறந்து.. கரெக்ட்டா வந்தாச்சு போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளு குடித்து வீடியோ வெளியிட்ட இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கேரள மாநிலத்தில், மதுபான கடைகள் இருப்பது போலக் கள்ளுக்கடைகளும் இருக்கின்றன... சாயங்காலம் நேரங்களில் இந்த கடைகளுக்கு ஏராளமான, தொழிலாளிகள் வருவது வழக்கமாகும்.

அதற்காகவே, இதுபோன்ற கள்ளுக்கடைகளில் தொழிலாளர்கள் உட்கார்ந்து குடிப்பது போல, பார் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.. இதனால் பார் உள்ள கள்ளுக்கடைகளுக்கு கிராக்கிகள் அதிகமாம்.

இளம்பெண்

இளம்பெண்

இந்நிலையில், சமீபத்தில் இங்குள்ள கள்ளுக்கடை ஒன்றிற்கு இளம் பெண்கள் சிலர் சென்றுள்ளனர்.. அந்த பாருக்குள்ளேயே உட்கார்ந்து கள்ளு குடித்துள்ளனர்.. கள்ளு குடிப்பது போல் வீடியோ எடுத்து, அவைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிடவும், இந்த காட்சிகள் வைரலாகி, கேரளா சுங்கத்துறை அதிகாரிகளின் பார்வையிலும் அந்த வீடியோ தெரியவந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து அதில் கள்ளு குடிக்கும் இளம்பெண்கள் யார்? என்பது குறித்து விசாரணை ஆரம்பமானது.. விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் கள்ளுக்கடையானது திருச்சூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குண்டேலிகடவு பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள்

நண்பர்கள்

மேலும் கள்ளுக்கடையில் அமர்ந்து கள்ளு குடித்த பெண்களின் விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை போலீசார் கைது செய்தனர்.. தொடர்ந்து விசாரணையும் செய்யப்பட்டது.. அந்த இளம் பெண்கள், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலிக்காகவும், சோஷியல் மீடியாவில் ஃபேமஸ் ஆகவேண்டும் என்பதற்காகவும் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.. கைதான பெண்களில் அஞ்சனாவும் ஒருவர்.. இந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டதாம்.. கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்..

யார் அந்த பெண்

யார் அந்த பெண்

தற்போது, தாய் நாட்டிற்கு திரும்பியிருக்கிறாராம்.. கணவர் ஃபாரினில் இருந்து வந்துவிட்டால், அதை கொண்டாட தன்னுடைய தோழிகளுக்கு கள்ளுக்கடையில் ட்ரீட் வைத்துள்ளார்.. அப்பொழுதுதான் விளையாட்டாக, தான் கள்ளு குடிப்பதை வீடியோ எடுத்த அஞ்சனா அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்... ஆனால் கைது வரை இந்த வீடியோ செல்லும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை...கள்ளுக்கு விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் அவரை அதிகாரிகள் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், பெண்களை காவல்துறையினர் கைது செய்தநிலையில், அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஆதரவு + எதிர்ப்பு

ஆதரவு + எதிர்ப்பு

இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும்நிலையில், சிலர் எதிர்ப்பு கருத்துக்களும், சிலர் ஆதரவு கருத்துக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவாகி கொண்டிருக்கிறது..கள்ளு குடிப்பதற்கெல்லாம் கைது தேவையா? ஆண்களை ஏன் கைது செய்வதில்லை? பெண் குடித்தாலும், ஆண் குடித்தாலும் ஒன்றுதானே? ஏதோ ஒரு வகையில் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கிறீர்கள் என ஒருசாரார் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.. மற்றொரு தரப்பினரோ, யார் குடித்தாலும் தவறுதானே? டாஸ்மாக் சரக்கைவிட கள்ளு கெடுதலான ஒன்றா? என்றும் கேட்க துவங்கி உள்ளனர். கள்ளுக்கடையில் உட்கார்ந்து பெண்கள் கும்பலாக கள்ளு குடித்த வீடியோ கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+