"மிட்நைட்டில்".. லுலு மாலுக்குள் ஒரே பரபரப்பு.. மலங்க விழித்த கடைக்காரர்கள்.. அடுத்த தலைவலி ஆரம்பம்

லுலு மாலில் நள்ளிரவில் மக்கள் குவிந்ததால் திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: லுலு மாலில், இரவு நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

இந்தியாவிலேயே, ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களினால் அதிகம் பாதிக்கப்படுவது கேரள மாநிலம்தான்.. கொரோனா தொற்று நாட்டிலேயே இங்குதான் அதிகமாக பரவி காணப்பட்டது..

அந்த தொற்றை ஒழிக்க கிட்டத்தட்ட 2 வருடங்கள் அம்மாநில அரசு பாடுபட்டது.. இப்போது மறுபடியும் கொரோனா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது.

 மும்முரம்

மும்முரம்

ஏற்கனவே, மழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் கேரளா இயல்பாகவே சிக்கி கொள்ளும்.. அதன் பூகோள அமைப்பு அந்த மாதிரி உள்ளதே இதற்கு காரணம்.. இதேபோல, டெங்கு, காலரா, சிக்கன்குனியா, போன்ற வைரஸ் நோய் தாக்குதல்களையும் கேரள மாநிலம் அதிக அளவு எதிர்கொண்டு வருகிறது.. இப்படி எல்லா பக்கமும் சிக்கி கொண்டுள்ளதால், அவைகளை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

மிட்நைட்

மிட்நைட்

குறிப்பாக, தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டுள்ளது.. ஆனால், இது எதை பற்றியும் கவலைப்படாமல், கேரளா மக்கள், திடீரென நள்ளிரவில் ஒரே இடத்தில் கூடிவிட்டனர்.. திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல லுலு மால் ஒன்றில்தான், மிட்நைட் என்றும் பாராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.. இதற்கு காரணம், "ஃப்ளாட் 50 ஆஃபர்" என்ற கவர்ச்சி அறிவிப்புதான்.

 நள்ளிரவு 12 மணி

நள்ளிரவு 12 மணி

அதாவது, நள்ளிரவு சரியாக 12 மணிக்கு தொடங்கி விடிகாலை வரை எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு பாதி விலை மட்டுமே என்பதுதான் அந்த ஆபர்.. மிட்நைட் 12 மணி என்றால், கூட்டம் வராது என்று நினைத்தார்களோ என்னவோ.. அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே திரண்டு கும்பல் கும்பலாக வந்துவிட்டனர்.. லுலு மால் முழுவதுமே நெருக்கடியும், தள்ளுமுள்ளும் காணப்பட்டது.. வரிசையில் நின்றும்கூட, வாசலை தாண்டி கூட்டம் கூடி, கடைசியில் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது..

எஸ்கலேட்டர்கள்

எஸ்கலேட்டர்கள்

வரிசைகள் ஒருபக்கம் இருந்தால், வராண்டா, படிக்கட்டுகள், எஸ்கலேட்டர் என மாலில் ஒரு இடம்கூட விட்டுவைக்காமல் மக்கள் வந்து நின்றுவிட்டனர். இவ்வளவு பேரையும் ஒரே நேரத்தில் பார்த்து, கடைக்காரர்கள் திருதிருவென விழித்தனர்.. அவர்களை சமாளிக்க முடியவில்லை.. கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. எத்தனை பேருக்கு ஆஃபர்களை தருவது என்றும் தெரியவில்லை..

ஷட்டர்கள்

ஷட்டர்கள்

இவர்கள் விழிப்பதை பார்த்த பொதுமக்கள், எப்படியும் நமக்கு ஆபர் பொருட்கள் கிடைக்காது என்று நினைத்து கொண்டு, கடைகளின் ஷட்டரைத் திறந்ததும் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர்.. இதனால் மேலும் திணறிப்போன ஊழியர்கள், கடையை இழுத்து மூடிவிட்டு ஓடினர். இந்த காட்சிதான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது... இதை வியப்புடன் இணையவாசிகள் பார்த்து வந்தாலும், சுகாதாரத் துறையினர்தான் அதிர்ந்து போய் உள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+