வெற்று பேப்பரில் கையெழுத்து.. ஆபாச படத்தில் மிரட்டிநடிக்க வைத்த பெண் இயக்குநர்.. குவியும் புகார்கள்
வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் என்னை ஆபாசமாக நடிக்க வைத்தார்கள்- இயக்குநர் மீது இளைஞர் புகார்
திருவனந்தபுரம்: நான் வேண்டாம் என சொல்லியும் என்னை மிரட்டி ஆபாசமாக நடிக்க வைத்ததாக பெண் இயக்குநர் மீது இளைஞர் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
திருவனந்தபுரம் வெங்கானூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இயக்குநர் லட்சுமி தீப்தாவை தொடர்பு கொண்டுள்ளார். அவரும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடப்பதாக கூறியுள்ளார்.
ஒரு வெப் சீரிஸில் நடிக்க வைப்பதாகவும் அதற்காக லட்சுமி அந்த இளைஞரிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அருவிக்கரை அருகே ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அந்த இளைஞரை லட்சுமி வரவழைத்துள்ளார்.

அபார்ட்மென்ட்
அங்கு ஒரு அபார்ட்மென்ட்டுக்கு வந்த இளைஞரை வைத்து சில காட்சிகளை லட்சுமி எடுத்துள்ளார். ஆனால் அந்த தொடர் ஆபாச வெப் சீரிஸ் என்பது போக போக அந்த இளைஞருக்கு தெரியவந்தது. இதை அந்த இளைஞர் தட்டிக் கேட்டுள்ளார். மேலும் இது போன்ற படங்களில் தான் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் லட்சுமியோ அந்த இளைஞர் போட்ட சில பேப்பர்களை காட்டி மிரட்டியதாக தெரிகிறது.

ஆபாச தொடர்
அந்த பேப்பரை காட்டி காட்டி லட்சுமி அந்த இளைஞரை ஆபாச தொடரில் நடிக்க வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த இளைஞர் இயக்குநர் லட்சுமி மீது அருவிக்கரை போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தன்னை லட்சுமி மிரட்டி மிரட்டி ஆபாச வெப் தொடரில் நடிக்க வைத்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த வெப் தொடர் வெளியே வந்தால் என் எதிர்காலமே பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புகார்
இதையடுத்து அந்த இளைஞரின் புகாரின் அடிப்படையில் இயக்குநர் லட்சுமி தீப்தாவை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரை நெடுமாங்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 6 வாரங்களுக்கு ஒவ்வொரு புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப் சீரிஸின் டிரெய்லர்
இதனிடையே இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியிட்டப்பட்டதாக தெரிகிறது. இதனால்தான் அந்த இளைஞர் லட்சுமி மீது புகார் கொடுத்தார். மேலும் வெப் சீரிஸை பாதியில் நிறுத்த வேண்டும் என்றால் ரூ 5 லட்சம் இழப்பீடு கொடுக்க வேணடும். இல்லாவிட்டால் மீதமுள்ள படப்பிடிப்புகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் லட்சுமி மிரட்டியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார்
இந்த இளைஞர் புகார் அளித்ததும் ஏராளமான நடிகைகள் உள்பட பொது மக்கள் லட்சுமி மீது புகார் கொடுக்க முன்வந்தனர். மலப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அது போல் ஆலப்புழா, கோவலம் போலீஸிலும் புகார்கள் பதியப்பட்டுள்ளன. இந்த பெண் இயக்குநர் மீது மேலும் சிலர் புகார் அளிக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications