ஸ்ரீபிரியாவின் "தப்பு தாளங்கள்".. அதுக்கு இப்படியா.. ஓடையோரத்தில் கிடந்த அதே பொருள்.. ஒரே பரபரப்பு
திருவனந்தபுரம்: 19 வயது ஸ்ரீபிரியா செய்த காரியத்தை பார்த்து கேரள மாநிலமே அதிர்ந்து கிடக்கிறது.. என்ன நடந்தது? யார் இந்த ஸ்ரீபிரியா?
கடலூர் அருகே வடக்கு மூளியூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன்... மனைவி பெயர் ஸ்ரீபிரியா.. இவர்களுக்கு 11 மாதத்தில் கலையரசன் என்ற ஆண் குழந்தை உள்ளது..

பிரியாவுக்கு 19 வயதாகிறது. அதே பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா என்ற 23 வயது நபருடன் ஸ்ரீபிரியாவுக்கு நட்பு ஏற்பட்டது.. ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நெருக்கமாக பழகி வந்தனர்.. நாளடைவில் இந்த பழக்கம், தகாத உறவாக மாறியது... எனவே, அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர்..
பிரியா: இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு, ஸ்ரீபிரியா குழந்தையை தூக்கிகொண்டு ஜெயசூர்யாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. மனைவியை காணாமல் மணிகண்டன் எங்கெங்கோ தேடினார்.. ஆனாலும் ஸ்ரீபிரியா கிடைக்கவில்லை.
இந்த நிலையில், குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே கள்ளக்காதல் ஜோடி, கேரள மாநிலம் மலப்புரம் அருகே திரூருக்கு குடியேறிவிட்டனர்.. அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடிபோனார்கள். இவர்களுடன் ஜெயசூர்யாவின் அப்பா குமார், அம்மா உஷா ஆகியோரும் அதே வீட்டில் ஒன்றாக வசிக்க துவங்கினர்.
சிலம்பரசன்: இதனிடையே, இவர்கள் குடியிருக்கும் அதே பகுதியில் பிரியாவின் சொந்தக்காரர் சிலம்பரசன் என்பவரும் வசித்து வந்திருக்கிறார்.. இவர் ஸ்ரீபிரியாவை ஜெயசூர்யாவுடன் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. காரணம், ஸ்ரீபிரியா காணாமல் போனபோது, சிலம்பரசனும் ஸ்ரீபிரியாவை பல இடங்களில் தேடி அலைந்திருக்கிறார். இப்போது திடீரென ஜெயசூர்யாவுடன் பிரியாவை பார்த்துவிட்டு, அருகில் சென்று பேசியிருக்கிறார்.
குழந்தை எங்கே? என்று கேட்டதற்கு, மலங்க மலங்க விழித்திருக்கிறார் ஸ்ரீபிரியா.. குழந்தை பற்றி எது கேட்டாலும் சரியாக பதில் சொல்லவில்லையாம்.. எனவே, சந்தேகமடைந்த சிலம்பரசன் நேராக, திரூர் போலீசுக்கு சென்று புகார் செய்துவிட்டார்.
போலீசாரும் ஸ்ரீபிரியா ஜோடியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது.. அப்போதுதான் ஸ்ரீபிரியா பேசியதை கேட்டு போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.
இடையூறு: வீட்டை விட்டு காதலனுடன் தனிகுடித்தனம் நடத்தி வந்தாலும், ஜாலியாக இருக்க முடியவில்லையாம். தங்களது மகிழ்ச்சிக்கு குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்தாராம். அதனால், ஸ்ரீபிரியாவும், ஜெயசூர்யாவும் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது...
அதற்கு பிறகு, குழந்தை இறந்ததுமே, ஒரு சூட்கேஸில் குழந்தையின் உடலை வைத்து திருச்சூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருக்கும் ஓடை அருகே வைத்து விட்டார்களாம். அதுவும் குழந்தையை 2 மாதத்துக்கு முன்பேயே கொன்றுவிட்டதாக போலீசில் சொன்னார்கள்.
பின்னர் போலீசார் 2 பேரையும் திருச்சூர் அழைத்து சென்றனர்.. அவர்கள் சொன்னதுபோலவே, ஓடை அருகில் சூட்கேஸ் இருந்தது.. அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, குழந்தையின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது...
கைது: பிறகு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.. இந்த குழந்தையை கொன்றதில், ஜெயசூர்யாவின் அம்மா, அப்பாவுக்கும் பங்கிருக்கிறதாம். அவர்களும் உடந்தையாக இருந்திக்கிறார்கள். இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. அப்பா, அம்மா ஜோடி + ஸ்ரீபிரியா ஜெயசூர்யா ஜோடி என 4 பேருமே கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்..!












Click it and Unblock the Notifications