Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோமேட்டோ டெலிவரி மேன் டூ நீதிபதி.. படிப்பை மட்டும் விட்றாதீங்க.. சாதித்து காட்டிய இளைஞர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இளம் வயது முதலே வறுமையுடன் போராடினாலும் கல்வி என்னும் ஆயுதத்தால், வறுமையை வென்று சாதித்து காட்டியிருக்கிறார் கேரளாவின் முகம்மது யாசீன் என்ற இளைஞர். நியூஸ் பேப்பர் டெலிவரி மேனாக, சோமாட்டா டெலிவரி நபராக வேலை செய்து தொடர்ந்து தனது லட்சிய கனவை பின் தொடர்ந்ததற்கு பலனாக தற்போது மாஜிஸ்திரேட்டு பொறுப்பு கிடைத்துள்ளது. நீதிபதிகளுக்கான தேர்வில் மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் முகம்மது யாசீன்.

எத்தகைய நிலையில் இருந்தாலும் சரி.. கல்வியால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவை சேர்ந்த முகம்மது யாசீன் என்பவர் பேப்பர் டெலிவரி பாயாக வேலை பார்த்து படித்த நிலையில் தற்போது நீதிபதி தேர்வில் வென்று சிவில் நீதிபதியாகியிருக்கிறார். வறுமையை வென்று இவர் எப்படி சாதித்தார் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

kerala judge trend

கட்டுமான தொழிலாளி வேலை

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள விளாயூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது யாசீன். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போதே தந்தை குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் முகம்மது யாசீனின் குடும்பம் வறுமையில் வாடியது. முகம்மது யாசீனையும் அவரது இளைய சகோதரரையும், தாயார் சுகாதார பணியாளராக வேலை பார்த்துக்கொண்டே கவனித்து வந்தார்.

கடும் வறுமையில் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். 7 வயதாக இருக்கும் போதே குடும்ப சூழல் கருதி பேப்பர் டெலிவரி செய்ய தொடங்கினார். வேலை பார்த்துக்கொண்டே படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினார். பெயிண்டர், கட்டுமான தொழிலாளி, பால் விநியோகம் என பல வேலைகளை செய்து இருக்கிறார்.

சோமேட்டோ டெலிவரிமேனாக பணி

கல்வி படிப்பை முடித்ததும் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து இருக்கிறார். வறுமை ஒருபக்கம் வாட்டினாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த யாசின், படிப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 2019- ஆம் ஆண்டு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் படித்தார். பகல் நேரத்தில் கல்லூரிக்கு போன முகம்மது யாசீன், இரவில் சோமாட்டாவில் உணவு டெலிவரி செய்து இருக்கிறார்.

பகுதி நேரம் வேலைக்கு போனாலும் கல்லூரியிலும் நன்றாக படித்து வந்து இருக்கிறார் முகம்மது யாசீன். எல்.எல்.பி படிப்பை முடித்த பிறகு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். வழக்கறிஞராகவும் சிறப்பாக பணியாற்றிய யாசீன், முதல் ஆண்டிலேயே சிறந்த வழக்கறிஞர் என்ற விருதையும் பெற்றார்.

சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி

இதற்கிடையே, கேரளாவில் சிவில் நீதிபதிகளுக்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வையும் முகம்மது யாசீன் எழுதியினார். அவரது அயராத உழைப்பு, படிப்பு காரணமாக இந்த தேர்விலும் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வு ஆகியிருக்கிறார். நீதிபதி தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார் முகம்மது யாசீன்.

சாதாரண பின்னணியில் இருந்து கல்வி என்னும் ஆயுதத்தால் உச்சத்தை தொட்டு இருக்கும் முகம்மது யாசீனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். முகம்மது யாசீன் இது தொடர்பாக கூறுகையில், "எனது தாய் தனி ஒருவராக எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தார். சமூகத்தில் பலரும் எங்களை அவமானப்படுத்துவார்கள்.

சவால்களை முதலீடாக மாற்றினேன்

இந்த அவமானங்கள் எல்லாம் தான் எனக்கு எப்போதும் முதலீடாக மாறின. பள்ளியிலும் நான் சுமாராகவே படிப்பேன். இதற்காகவும் என்னை கிண்டலடிப்பார்கள். மோசமாக படிப்பதாக கூறி தொடர்ச்சியாக என்னை வெளியில் நிற்க வைப்பார்கள். எப்போதுமே யாராவது வாங்கி படித்த புத்தகத்தை தான் வாங்கி படிப்பேன்.

மசூதியில் தானமாக கொடுக்கப்படும் அரிசியை பெற்றே வீட்டில் சமைப்போம். எனது கடின காலங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். எனது அனுபவம்தான் என்னை மேலும் வலுவானவராக மாற்றியது. சவால்களை எப்போதும் எனது முதலீடாக மாற்றினேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+