ராகுல் தகுதி நீக்கம்- வயநாடு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடக்கம்- காங். அதிர்ச்சி
திருவனந்தபுரம்: ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி இருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்பியானவர் ராகுல் காந்தி. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கு திடீரென விசாரிக்கப்பட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க் கட்சிகளும் முடக்கின. மேலும் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு லோக்சபா தொகுதி ஏற்கனவே காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் தாமதம் செய்து வந்தது.
அண்மையில் அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் நானாகவே இருப்பேன். நான் அரசியலுக்கு வந்த போது இப்படி எல்லாம் எம்பி பதவியை பறிப்பார்கள் என நினைத்து கூட பார்க்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் திடீரென வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கோழிக்கோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திடீரென வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை உள்ளிட்ட தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றன. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். வயநாடு தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
-
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications