திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாமே தப்பாதான் போகப்போகுது.. நாங்கதான் வெற்றி பெறுவோம்.. அடித்து சொல்லும் பினராயி விஜயன்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறாகவே இருந்துள்ளன ஆகையால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

சின்னவரை குனிய வச்சு முதுகில் ஏறிய முத்துச்செல்வி.. சேலத்தில் கலகலப்பு! சின்னவரை குனிய வச்சு முதுகில் ஏறிய முத்துச்செல்வி.. சேலத்தில் கலகலப்பு!

பாஜக வரலாறு படைக்கும்

பாஜக வரலாறு படைக்கும்

80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி 58 இடங்களை பெறும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கேரளாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும், பாஜகவும் சில இடங்களை பிடித்து வரலாறு படைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்க மறுப்பு

ஏற்க மறுப்பு

டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜக வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத்தில் பாஜ அமோக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள இந்த கருத்துக்கணிப்பை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றன.

தவறாகவே இருந்துள்ளது

தவறாகவே இருந்துள்ளது

இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நிச்சயம் பொய்யாய் போகும் என்றும் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக் கணிப்பு முடிவுகள் இதற்கு முன் தவறாகவே அமைந்துள்ளன.

வெற்றி பெறுவது உறுதி

வெற்றி பெறுவது உறுதி

2004 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புத் தெரிவித்தது. ஆனால் என்ன நடந்தது? அதனால் 23-ம் தேதிவரை காத்திருப்போம். கேரளாவைப் பொறுத்தவரை நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. அதில் சந்தேகம் இல்லை.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

சபரிமலை விவகாரம் தேர்தலில் எதிரொலிக்காது. அதை யார் யார் பிரச்சனை ஆக்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகையால் சபரிமலை விவகாரம் தேர்தலில் ஒரு பிரச்சனையே இல்லை. இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

English summary
Kerala Chief Minister Pinarayi Vijaya says Exit polls will fail, our Victory is confirm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X