சிறுத்தையை கொன்று... இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிறுத்தையை கொன்று அதனை சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 5 பேர் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 57 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மங்குளம் மலைத்தொடரின் முனிப்பாரா பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சிறுத்தையை வேட்டையாடியதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் பி.கே. வினோத் என்பவரின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சிறுத்தையின் தோல், பற்கள், தாடை எலும்புகள், நகங்கள் மற்றும் அதன் இறைச்சி இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வினோத் உள்பட 5 பேர் சிறுத்தையை கொன்று அதன் உடல் பாகங்களை விற்பனை செய்ய முயன்றதும், சிறுத்தையின் இறைச்சியை அவர்கள் சமைத்து சாப்பிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த வினோத், வி.பி.குரியகோஸ் (74), சி.எஸ்.பினு (50), சாலி குஞ்சப்பன் (54), வின்சென்ட் (50) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 57 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications