அந்தரங்க உறுப்பில் தம்புல்ஸ், காம்பஸால் குத்தி ராகிங்.. கேரளத்தை உலுக்கிய சம்பவம்.. 5 மாணவர்கள் கைது
கோட்டயம்: கேரளா, கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை நிர்வாணப்படுத்தி, அந்தரங்க உறுப்பில் தம்புல்ஸை கத்திவிட்டு, காம்பஸ் மூலம் காயம் ஏற்படுத்தி ராகிங் கொடுமையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 5 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் அரசு செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு சீனியர் மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களுக்கு தொடர்ந்து ராகிங் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதில் பாதிக்கப்பட்ட 3 மாணவர்கள் காந்திநகர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

மாணவர்கள் அந்த புகாரில் கூறுகையில், "கோட்டயம் செவிலியர் கல்லூரியில் நாங்கள் முதலாம் ஆண்டு படித்து வருகிறோம். அங்கு மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் எங்களுக்கு பல்வேறு வகையில் ராகிங் கொடுமை அளித்து வருகிறார்கள். மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர், முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களை நிர்வாணமாக்கி, உடற்பயிற்சிக்கு பளு தூக்கும் தம்புல்ஸை எங்களின் அந்தரங்க உறுப்பில் கட்டி கொடுமைப்படுத்தினார்கள். கணிதப் படிப்புக்காக பயன்படுத்தும் ஜாமென்ட்ரி பாக்ஸில் இருக்கும் காம்பஸ் உள்ளிட்ட உபகரணங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். வேண்டுமென்றே மாணவர்களின் உடல்களில் காயப்படுத்துவார்கள்.
பிறகு இந்த இடங்களில் அவர்கள் பயன்படுத்தும் லோஷன் க்ரீம்களை புண்ணில் தடவுவார்கள். நாங்கள் வலியில் அலறி துடிக்கும்போது, அந்த க்ரீமை வாய், முகம், தலையில் பூசி டார்ச்சர் செய்வார்கள். அவர்கள் ஒவ்வொரு வாரமும் வீக் எண்ட்களில் மது அருந்துவதற்கு எங்களை அடித்து பணம் பிடிங்கி செல்வார்கள்.
உடல் ரீதியாக பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி அதை வீடியோ எடுத்து வைப்பார்கள். பிறகு அந்த வீடியோவை லீக் செய்துவிடுவோம் என்று மிரட்டி பணம் பறிப்பார்கள். இதை கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்தாலும் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம் என்று பிளாக்மெயில் செய்து வந்தனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர், தன் பெற்றோரிடம் இந்தப் பிரச்னை குறித்து கூறியுள்ளார். அவர்தான் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசி, பிறகு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரியும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோட்டயம் செவிலியர் கல்லூரி பொறுப்பு முதல்வர் மருத்துவர் லினி ஜோசப் கூறுகையில், "ராகிங் தொடர்பாக மாணவர்கள் கல்லூரியில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. ஒரு மாணவரின் பெற்றோர் தான், ஆசிரியரை அழைத்து புகார் கூறினார். அதனடிப்படையில் கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்புக்குழு விசாரணை நடத்தி முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மூன்றாம் ஆண்டு படித்துவரும் 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கல்லூரியில் விசாரணை குழு அமைத்துள்ளோம். அவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டயம் காவல் கண்காணிப்பாளருக்கு புகாரை அனுப்பியுள்ளோம்." என்றார்.
"மாணவர்களின் புகார் அடிப்படையில் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ராகிங்கில் ஈடுபட்ட, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்று காவல்துறை கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications