பிரியாணி அரிசியால் ‛ஆப்பு'.. சிக்கலில் நடிகர் துல்கர் சல்மான்! மம்மூட்டி குடும்பத்துக்கு அடிமேல் அடி
திருவனந்தபுரம்: நடிகர் துல்கர் சல்மான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பூடானில் இருந்து விலையுயர்ந்த கார்களை சட்டவிரோதமாக வாங்கியது தொடர்பான சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் அவர் பிரியாணி அரிசியால் சிக்கலில் சிக்கி உள்ள நிலையில் அவருக்கு நுகர்வோர் நீதிமன்றம் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே மம்மூட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டு சிகிச்சை முடிந்து கொஞ்சம் ரிலாக்ஸாக உள்ள நிலையில் அவரது மகன் துல்கர் சல்மான் தொடர்ந்து சிக்கலில் மாட்டி வருவது மம்மூட்டி குடும்பத்துக்கு அடி மேல் விழும் அடி என ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

பூடானில் இருந்து விலையுயர்ந்த கார்களை சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்துவதாக சுங்கத்துறை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவரது 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் துல்கர் சல்மான் இன்னொரு சிக்கலில் சிக்கி உள்ளார். இந்த சிக்கலில் சிக்க வைத்தது பிரியாணி அரிசி.அதாவது துல்கர் சல்மான் நடிகராக இருப்பதால் பல்வேறு பொருட்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் ‛ரோஸ் பிராண்ட்' என்ற நிறுவனத்துக்கு ‛பிராண்ட் அம்பாசிடர்' ஆக இருக்கிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் கேரளாவின் பத்தணம்திட்டாவில் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வரும் பிஎன் ஜெயராஜன் என்பவர் திருமண நிகழ்ச்சிக்கு உணவு சமைத்து கொடுத்தார். அதற்கு நடிகர் சல்மான் கான் ‛பிராண்ட் அம்பாசிடராக' இருக்கும் ‛ரோஸ் பிராண்ட்' பிரியாணி அரிசி 50 கிலோ பையை வாங்கி பயன்படுத்தினார். அந்த அரிசியில் சமைத்த உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அப்போது ஏராளமானவர்களுக்கு உடல் நல பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் கேட்டரிங் நிறுவனத்தை சேர்ந்த பிஎன் ஜெயராஜன் என்பவர் பத்தணம்திட்டா நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில்,‛‛எனது கேட்டரிங் நிறுவனத்துக்கு நல்ல பெயர் உள்ளது. இதனால் பொதுமக்கள் என்னை தேடி வந்தனர். ஆனால் பத்தணம்திட்டா திருமண நிகழ்ச்சியில் ரோஸ் பிரியாணி அரிசி பிராண்டை பயன்படுத்தி உணவு சமைத்து வழங்கியபோது ‛புட் பாய்சன்' ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது எனக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனக்கு வந்த பல ஆர்டர்கள் கேன்சலாகி வருகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். நான் வாங்கிய ‛ரோஸ் பிராண்ட் அரிசி'யில் பேக்கிங் செய்த தேதி மற்றும் காலவதி தேதி எதுவும் இல்லை. இந்த அரிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் அரிசி விற்பனை செய்த மலபார் பிரியாணி மற்றும் ஸ்பைசஸ் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் அரிசிக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி நிவாரணமாக ரூ.5 லட்சம், அரிசிக்கான செலவு ரூ.10,250 மற்றும் நீதிமன்ற செலவு உள்ளிட்டவற்றை பெற்று தர வேண்டும்'' என்றுகூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பத்தணம்திட்டா நுகர்வோர் நீதிமன்றம் டிசம்பர் 3ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் உள்பட 3 பேரும் ஆஜராக வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது துல்கர் சல்மானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இது நடிகர் மம்மூட்டி குடும்பத்துக்கு அடிமேல் விழும் அடி என ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். நடிகர் மம்மூட்டி உடல்நலக்குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று சமீபத்தில் தான் ஊருக்கு திரும்பினார். இதனால் ரசிகர்கள் ஹேப்பியான நிலையில் அதற்குள் மம்மூட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான் சொகுசு கார் சர்ச்சை மற்றும் அரிசி சர்சைகளில் சிக்கி பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications