ரூ.25 கோடி லாட்டரி அடித்த மறுநாளே சரத் செய்த காரியம்.. அசந்து போன சக தொழிலாளர்கள்.. அடடே செம!
திருவனந்தபுரம்: சமீபத்தில் நடந்த கேரள ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசு ரூ.25 கோடி ஆலப்புழாவை சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியருக்கு அடித்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர் எந்தவித பந்தாவும் இன்றி மறுநாளே பெயிண்ட் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். ரூ.25 கோடி பரிசு அடித்த போதிலும் எந்த பந்தாவும் இன்றி தனது வழக்கமான பணியை செய்து வருவது கேரள சேட்டன்கள் இடையே வியப்பை அளித்துள்ளது.
கேரள ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த லாட்டரியில் ... என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்தது. முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது இரண்டு நாட்கள் கழித்து தெரியவந்தது. ஆலப்புழா அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்குதான் முதல் பரிசாக ரூ.25 கோடி அடித்தது கண்டறியப்பட்டது.

கேரளா லாட்டரி வின்னர்
நெட்டூரில் உள்ள பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்த சரத் நாயர் முதல் முறையாக பம்பர் லாட்டரி வாங்கிய நிலையில், வாங்கிய முதல் டிக்கெட்டிற்கே பரிசு மழை கொட்டியது. ரூ.25 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி இனி என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்கள் மத்தியில் நிலவியது.
பரிசு அடித்த உற்சாகத்தில் இருந்த போதிலும், சரத் நாயர் மறுநாளே வழக்கம் போல தான் வேலை பார்க்கும் கடைக்கு சென்றார். "இனி இவரெல்லாம் இங்கே வேலை பார்க்க மாட்டார்... கோடீஸ்வரர் ஆகிவிட்டார்" என நினைத்த சக ஊழியர்களுக்கு வியப்பு அளிக்கும் வகையில், சரத் நாயர் அதே கடையில் வேலை பார்க்க போவதாக கூறியுள்ளார்.
இங்கேயே வேலை பார்ப்பேன்
ரூ.25 கோடி பரிசு அடித்த மகிழ்ச்சியில் தனது சக ஊழியர்களுக்கு இனிப்பு வாங்கி அளித்த சரத் நாயர், எப்போதும் போல தனது வேலையை செய்து வருகிறார். இது குறித்து சரத் நாயரிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் விவரம் வருமாறு:- "லாட்டரியில் பரிசு அடித்ததை முதலில் நான் தான் பார்த்து, எனது சகோதரரிடம் கூறினேன். இருவரும் அதன்பிறகு எண்ணை உறுதி செய்து கொண்டோம்.
பரிசு அடித்த பணத்தை என்ன செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து இந்த வேலையை செய்வேன். பணத்தை எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது தொடர்பாக நிதி வல்லுனர்களின் ஆலோசனையை பெற உள்ளேன். நான் இப்போது பெயிண்ட் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். இந்த லாட்டரியில் ரூ.25 கோடி பெற்றிருந்தாலும், தொடர்ந்து இங்கே தான் வேலை செய்வேன்." என்றார்.
அசந்து போன சேட்டன்கள்
லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்த போதிலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத சரத் நாயர், வழக்கமாக செல்லும் பேருந்தில் வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார். நேரடியாக டிக்கெட் வாங்கிய கடைக்கு சென்ற சரத், லாட்டரி கடைக்காரருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு, வேலை பார்க்கும் கடைக்கு சென்று வேலையை தொடங்கிவிட்டார். ரூ.25 கோடி பரிசு அடித்த போதிலும் எந்த பந்தாவும் இன்றி தனது வழக்கமான பணியை செய்து வருவது கேரள சேட்டன்கள் இடையே வியப்பை அளித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications