கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை...!
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் சுற்றளவுக்கு ஜங்க் புட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜங்க் புட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதேபோல் பள்ளிகளில் வகுப்பு நேரத்தில் அலைபேசி பயன்படுத்தவும் ஆசிரியர்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடல் நலனுக்கு பாதிப்பு
ஜங்க் புட்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை யாரும் கேட்பதாக தெரியவில்லை. தீங்கை விலை கொடுத்து வாங்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில், கேரளாவில் பள்ளிகளை சுற்றி 50 மீட்டருக்கு ''ஜங்க் புட்கள்'' விற்கத் தடை போடப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உத்தரவு
பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர ஏற்கனவே கேரளாவில் தடை அமலில் உள்ள நிலையில், ஆசிரியர்களும் வகுப்பு நேரத்தில் போனில் பேசவோ சமூக வலைதளங்களில் செயல்படவோ, கூடாது என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

எப்போது அமல்
ஜங்க் புட்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் டிசம்பர் 1-ம் தேதி முதல் கேரளாவில் அமலுக்கு வருகிறது. இதனை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிரமாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.

பெற்றோர்கள் மகிழ்ச்சி
பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போதோ, அல்லது பள்ளிகளில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போதோ அங்கிருக்கும் கடைகளில் தரமற்ற திண்பண்டங்களை கேட்டு, (முன்னணி நிறுவனங்களின் பொருட்களை போலவே கவர் வடிவமைக்கப்பட்டு வேறு பெயர்களில் இருக்கும்) அழுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கக் கூடும். பெற்றோரும் வேறு வழியின்றி பிள்ளைகளின் அழுகையை நிறுத்துவதற்காக அவர்கள் கேட்கும் பொருளை வாங்கி கொடுப்பார்கள். இந்நிலையில் கேரளாவில் நடைமுறைக்கு வர உள்ள இந்த புதிய நடவடிக்கையால் போலியான பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்யும் ஒரு சில கடைக்காரர்கள் கவலை அடைந்துள்ளார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications