"போலாம் ரைட்".. நாளை மறுநாள் முதல் "ஸ்பெஷல்" பஸ்கள்.. எங்கே பாருங்க.. தமிழக போக்குவரத்து துறை அதிரடி
பம்பைக்கு சென்னையில் இருந்து நாளை மறுநாள் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன
திருவனந்தபுரம்: சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை டூ பம்பை இடையே விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் பம்பையில் உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது... இந்த சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
அதுபோல, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான லட்சக்கணக்கான பக்தர்கள், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண செல்வார்கள்..

அந்தவகையில், நாளை மறுநாள் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது.. இந்த சமயத்தில் கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரோதம் எடுத்து மலைக்கு சென்று வருவார்கள். இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு நவம்பர் 17ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் பஸ்கள் எனப்படும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன..
சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது... இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பேருந்து டிக்கெட்டுகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதேபோல, சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.. இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படும். தமிழக போக்குவரத்து துறையின் இந்த சூப்பர் அறிவிப்பால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications