ரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார்.. ஹரி நாடார் கைது
திருவனந்தபுரம்: 16 கோடி மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்கு வாங்கியவர் ஹரி நாடார்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் 37,727 வாக்குகளை அள்ளினார். அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர்.

ஹரி நாடார் வாக்குகள்
இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3,539 மட்டுமே ஆகும். ஹரிநாடார் 37,727 வாக்குகள் வாங்கியதன் மூலம் திமுகவின் பூங்கோதை ஆலடி அருணாவின் வெற்றியை காலி செய்தார்.

வருமான வரி சோதனை
நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் ஹரிநாடார் 12 கிலோ எடை கொண்ட நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். அண்மையில் விமான நிலையத்தில் நகைக்கான பில் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கேள்வி எழுப்பியதுடன் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் திருவனந்தபுரத்தில் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிதாக பேசப்பட்டது.

கேரளாவில் கைது
இந்த சூழலில் 16 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளன.

பரபரப்பு
எங்கு நடந்த மோசடி என்பது குறித்து காவல்துறை சார்பிலோ அல்லது கைது குறித்து ஹரி நாடார் சார்பிலோ எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 16 கோடி மோசடி செய்ததாக ஹரி நாடார் கைது செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications