கைகோர்த்த காங்+பாஜக.. ஆஹா நாட்டின் இளம் மேயர் ஆர்யாவிற்கு சிக்கல்.. கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கு நியமனம் செய்ய கட்சி உறுப்பினர்களின் பட்டியலை கேட்டதாக மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேபோல பல்வேறு பணிகளில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் சேர்க்கப்படுவதாக குற்றம்சாட்டி வழக்கறிஞர் கே.ஆர்.ராஜ்குமார் இது குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.பாபு விளக்கம் கேட்டு மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய புள்ளியான டி.ஆர்.அனில் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது அம்மாநில அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஆளுநர் ஆரிஃப் முகமதுகானுக்கும் துணை வேந்தர்கள் நியமனத்தில் பெரும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்தை சிபிஎம் அரசு இயற்ற உள்ளதாக அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில், இப்பிரச்னைக்கு மத்தியில் மற்றொரு பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது, திருவனந்தபுரம் மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவில் 295 தற்காலிக காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த பணியிடங்களில் கட்சி உறுப்பினர்களை நிரப்புவதற்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் முயன்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விசாரணை
அதாவது, கட்சியின் முக்கிய புள்ளியாக உள்ள டி.ஆர்.அனிலுக்கு இந்த விவரங்களை கேட்டு மேயர் கடிதம் எழுதியுள்ளதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடிதத்தில் மேயரின் கையெழுத்து இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த கடிதம் வெளியான நிலையில், மேயருக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சியினரும் மேயர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்த மேயர் 'ஆர்யா ராஜேந்திரன்' சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளார்.

போலீஸ் விசாரணை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னால் எனது அலுவலகத்தில் உள்ள யாரையும் சந்தேகப்பட முடியவில்லை. எனவேதான் விசாரணை நடத்த கடிதம் கொடுத்துள்ளேன். சிபிஎம் கட்சியில் இவ்வாறு கடிதம் எழுதும் வழக்கம் கிடையாது. இக்கடிதத்தில் நான் எந்த கையெழுத்தையும் இடவில்லை. கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது கூட எனக்கு தெரியாது. என் மீதான குற்றச்சாட்டை நான் துணிச்சலாக எதிர்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

நோட்டீஸ்
இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், வழக்கறிஞர் கே.ஆர்.ராஜ்குமார் சம்பவம் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கடிதத்தின் விவரத்தை குறிப்பிட்டு இது தொடர்பாக சிபிஐ அல்லது நீதி விசாரணை வேண்டும் என்று கோரியிருந்தார். அதே போல கடந்த இரண்டாண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியமனங்கள் நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.பாபு முன்பு இன்று(நவ.10) விசாரணைக்கு வந்தது.

இளம் மேயர்
வழக்கை விசாரித்த நீதிபதி, விளக்கம் கேட்டு மேயர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகியான டி.ஆர்.அனில் என இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கேரளாவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர்தான் ஆர்யா ராஜேந்திரன். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவருக்கு வயது 21. நாட்டின் இளம் மேயராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications