"தொலைச்சிருவோம்".. கத்தரிக்கோலை எடுத்த சந்தீப்.. உலுக்கிய டாக்டர் வந்தனாவின் மரணம்.. முதல்வர் அதிரடி
திருவனந்தபுரம்: டாக்டர் வந்தனா கொலை செய்யப்பட்ட அன்றைய தினமே இன்னொரு டாக்டரும் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.. இதையடுத்து, கேரள மாநிலத்தில் அவசர சட்டம் இயற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தீப்.. இவர் ஒரு ஆசிரியர்.. ஆனால், போதைக்கு அடிமையாகி உள்ளார்.. சந்தீப் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு திடீரென உடல்நலம் பாதித்துவிடவும், சந்தீப்பை சிகிச்சைக்காக கொட்டாரகரையில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பயிற்சி மருத்துவர் வந்தனா சிகிச்சை தந்தார்..

கத்தரிக்கோல்: அப்போது திடீரென டாக்டர் வந்தனா பக்கம் திரும்பிய சந்தீப் அவரையும் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார்.. வந்தனாவின் மரணமும், இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் கேரளாவை உலுக்கி எடுத்துள்ளன.. வந்தனா கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் அம்மாநிலத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இளநிலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
23 காயங்கள்: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் டாக்டர் வந்தனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், வந்தனாவின் பெற்றோருக்கும் அவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.. இதனிடையே, வந்தனாவின் முதற்கட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், கத்தியால் குத்தப்பட்டு இறந்த டாக்டர் வந்தனா உடலில் 11 கத்திக்குத்து காயங்கள் இருந்தனவாம்.. தலையில் 3 முறையும் முதுகில் 6 முறையும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.. உடம்பெல்லாம் 23 காயங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதுகு தலை: அதாவது, முதுகு மற்றும் தலையில் குத்தப்பட்ட ஆழமான காயங்களால் தான் வந்தனா இறந்துள்ளார் என்பதே போஸ்ட் மார்ட்டம் தந்த ரிப்போர்ட் ஆகும்.. குற்றவாளியான சந்தீப்புக்கு 41 வயதாகிறது.. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டைக்கு போயுள்ளார்.. மோதலிலும் ஈடுபட்டுள்ளார்.. அந்த தகராறில்தான், சந்தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளது.. இந்த காயத்துக்கு சிகிச்சை தருவதற்காகவே, போலீசார் அவரை விடிகாலையில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்...
ட்ரீட்மென்ட் தந்துகொண்டிருந்தபோதே, பக்கத்தில் கிடந்த கத்தரிக்கோலை எடுத்து வெளியில் நின்றுகொண்டிருந்த அவரது உறவினர் பினு, போலீஸ்காரர்களை சந்தீப் குத்த சென்றுள்ளார்..
போஸ்ட் மார்ட்டம்: அப்போது திடீரென டாக்டடர் வந்தனா பக்கம் திரும்பிய சந்தீப் அவரையும் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார்.. வந்தனாவின் மரணமும், இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் கேரளாவை உலுக்கி எடுத்துள்ளன.. வந்தனா கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் அம்மாநிலத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இளநிலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
ஆனால், அதற்குள் இன்னொரு டாக்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இடுக்கி மாவட்டத்தில் உள்ளது நெடும்கண்டம் என்ற பகுதி.. இங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரவீன் என்ற இளைஞரை கைது செய்து போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு வழக்கமான மெடிக்கல் செக்கப்பினை அங்கிருந்த டாக்டர்கள் செய்து கொண்டிருந்தனர்..

திடீர் ஸ்டிரைக்: அப்போது யாருமே எதிர்பாராத வகையில், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து டாக்டர்களையும், நர்ஸ்களையும் பிரவீன் சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் 2 டாக்டர்கள், 2 நர்ஸ்கள் பலத்த காயமடைந்தனர்.. இதையெல்லாம் கேட்டு கேரள மருத்துவத்துறையே உறைந்து போயுள்ளது..
தங்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதமும் தராத வரை, பணிக்கு செல்ல மாட்டோம் என்று கூறி பல அரசு மருத்துவமனை டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.. இந்த 2 விவகாரமும் கேரள அரசுக்கு மிகப்பெரிய தலைவலியையும் நெருக்கடியையும் ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை முதல்வர் பினராயி விஜயன் நடத்தினார்.. ஏற்கனவே இருக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் கூடுதலாக சில அம்சங்களையும் சேர்த்து அவசர சட்டத்தை இயற்றுமாறு அதிரடியாக தற்போது உத்தரவிட்டுள்ளார்.
அவசர சட்டம்: இதையடுத்து, பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டு வருகின்றன..
அரசு மருத்துவமனைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், மருத்துவர்களை தாக்கினால் ஒரு மணிநேரத்திற்குள் எப்ஐஆர் பதிவு செய்யும் வகையிலுமான விஷயங்களும் அந்த அவசர சட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகிறதாம்.. இதைதவிர, டாக்டர்களை தாக்குபவர்கள் யாராக இருந்தாலும் சரி, ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலும் திருத்தம் அம்சம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன.. இந்த அவசர சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications