Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹனிரோஸை துரத்திய நகைக்கடை ஓனர்? உண்மை என்ன? கேரளாவில் வெடித்த விவாதம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள சினிமா நடிகையான ஹனிரோஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல நகைக்கடை அதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஹனிரோஸ் கொடுத்த புகாரும், அதன் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையும் கேரளாவில் விவாதமாக வெடித்திருக்கிறது. ஹனிரோஸுக்கு சிலரும், பாபி செம்மனூருக்கு சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

honey rose boby chemmanur

பிரச்சனை என்ன?:

ஹனிரோஸ் திரைப்பட நடிகையாக இருந்தாலும் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார். ஆனால், சோஷியல் மீடியாக்களில் இவர்தான் டாப். தென்னிந்திய திரையுலகில் வேறு எந்த முன்னணி நடிகைக்கும் கிடைக்காத ஊடக வெளிச்சம் இவருக்கு கிடைத்திருக்கிறது. தற்போது நகை கடைகள், ஷோரூம் ஆகியவற்றை திறந்து வைத்து வருகிறார். இதற்காக பணம் பெற்று தொழில்முறை பிரபல சிறப்பு அழைப்பாளராக மாறியிருக்கிறார். இதன் மூலம் கிடைத்த வருமானம் மிகப்பெரியதாக இருக்கிறது.

எது ஹனிரோஸுக்கு உதவியதோ, அதுவே அவரை சுற்றி எழுந்துள்ள சலசலப்புகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதாவது பாபி செம்மனூரின் நகைக்கடையை திறந்து வைக்க ஹனிரோஸ் அணுகப்பட்டிருக்கிறார். ஆனால் இவருக்கோ போதற்கு மனமில்லை. இந்த சம்பவம் நடந்த பிறகு, சில அடையாளம் தெரியாத நெட்டிசன்கள் ஹனிரோஸின் சோஷியல் மீடியா போஸ்டுக்கு ஆபாசமாக கருத்து தெரிவித்துள்ளனர். இதை செய்தது பாபி தான் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அதாவது தன்னுடைய கடையை திறக்க வரமாட்டாயா? என்கிற ஆத்திரத்தில் ஹனிரோஸை துரத்தி துரத்தி வேவு பார்த்து அவர் குறித்த அவதூறுகளை ஆட்களை வைத்து பதிவிட்டதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

புகார் கொடுத்த ஹனிரோஸ்:

அவதூறு குறித்து எச்சரித்த ஹனிரோஸ், விரைவில் போலீசில் புகார் கொடுப்பதாகவும் கூறியிருந்தார். அதேபோல புகாரும் கொடுத்திருந்தார். முதலமைச்சரின் தனிபிரிவுக்கு புகார் சென்ற நிலையில், கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. தொடக்கத்தில் சாதாரண இரண்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மிகப்பெரும் கோடீஸ்வரரான பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டார். இவரது கைதுதான் இன்று கேரளாவில் பெரிய விவாதாமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

யார் இந்த பாபி செம்மனூர்?:

செம்மனூர் நகைக்கடையின் அதிபரான இவர், கேரளாவில் பிரபலமானவர். தன்னுடைய நகை கடை திறப்புக்கு மாரடோனாவை அழைத்து வந்து கேரள இளைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். கேரளாவில் கால்பந்து கெத்து. கிரிக்கெட் எல்லாம் ரெண்டாவதுதான். சச்சின் டெண்டுல்கரா? மாரடோனாவா? என்றால் மொத்த கேரளாவும் மாரடோனா பக்கம்தான் நிற்கும். அப்படிப்பட்ட இளைஞர்களுக்காக மாராடோனாவை இவர் அழைத்து வந்திருந்தார்.

அதேபோல சமீபத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் குடும்பங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக இடம் கொடுத்து வீடு கட்டிக்கொள்ள அனுமதி வழங்கினார். இப்படியான நபரா பாலியல் புகாரில் சிக்கினார்? என்று விவாதங்கள் எழுந்துள்ளன.

honey rose boby chemmanur

கேரளா அரசும் மலையாள சினிமாவும்:

ஒரு காலத்தில் கேரளாவில்தான் ஆபாச படங்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வெளியாகியிருந்தன. மலையாள சினிமா உலகையும் கூட பலரும் ஆபாசமாகத்தான் பார்த்து வந்தார்கள். நடிகைகளிடம் பாலியல் சீண்டல்கள் அதிகமாக இருந்தன. இப்படி இருக்கையில்தான் கேரளாவில் 'ஹேமா கமிட்டி' அமைக்கப்பட்டது. அது மலையாள திரைதுறையில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரித்தது.

இந்த கமிட்டி கொடுத்த அறிக்கையில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுமல்லாது, அறிக்கையை வெளியிடக்கூடாது என்று ஒரு சாரார் நீதிமன்றத்தை நாடி தடையை பெற்றுள்ளனர். இந்த அறிக்கை வெளியானால் இப்போதுள்ள பல முக்கிய நடிகர்கள் சிறைக்கு செல்வார்கள். ஆக இந்த அறிக்கை நடிகைகளுக்கு நம்பிக்கையளித்திருக்கிறது.

நடிகைகளின் தொடர் புகார்கள்:

ஹேமா கமிட்டியின் நம்பிக்கை காரணமாக நடிகைகள் தங்களுக்கு நேரும் வன்கொடுமையை தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். புகார்களின் அடிப்படையில் கேரள சினிமா துறை ஆட்டம் கண்டிருக்கிறது. இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாகவே ஹனிரோசின் புகார் இருக்கிறது. புகாரின் அடிப்படையில் பாபி செம்மனூர் கைதாகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு கேரளாவில் சரியாக இருப்பதாக ஹனிரோஸ் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+