அது எப்படி எங்களை விஷம் என சொல்லலாம்? காந்தியின் கொள்ளுப் பேரனை கைது செய்க- பாஜக, ஆர்எஸ்எஸ் 'அடம்'
திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விஷம் என விமர்சித்ததால் மகாத்மா காந்தியின கொள்ளுப்பேரன் துஷார் காந்தியை கைது செய்ய வேண்டும் என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தங்களது இயக்கத்துக்கு எதிரான கருத்துகளை துஷார் காந்தி திரும்பப் பெற வேண்டும் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கோரிக்கை.
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் காந்தியவாதி கோபிநாதன் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி பங்கேற்று சிலையைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, பாஜக- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சித்தார். துஷார் காந்தி பேசுகையில், இந்தியாவின் ஆன்மாவை ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகள் என சங் பரிவாரங்கள் எனும் புற்று நோய் முடக்கி வைத்திருக்கிறது என காட்டமாக கூறினார். மேலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஆபத்தான எதிரிகள்; கேரளாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்; ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷம் எனவும் விமர்சித்தார் துஷார் காந்தி.
இதனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கொந்தளித்து போயினர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் துஷார் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்; துஷார் காந்தியின் காரை வழிமறித்தும் முழக்கமிட்டனர். மேலும் துஷார் காந்தியை கேரளா மாநில அரசு கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் முரளீதரன் கூறுகையில், மகாத்மா காந்தியின் பெயரை வைத்து ஆதாயம் தேடுவதில் துஷார் காந்தி நீண்டகாலமாகவே முயற்சித்து வருகிறார் என்றார். மேலும் காந்தி என்று பெயர் வைத்துக் கொண்டதாலேயே மகாத்மா காந்திக்கான மரியாதையை எல்லாம் எதிர்பார்க்கவும் கூடாது எனவும் கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் துஷார் காந்தியோ, என்னுடைய காரை வழிமறித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் கோஷம் எழுப்பினர். என் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை; இத்தகைய போராட்டங்கள்தான் அவர்கள் யார் என்பதை மக்கள் முன்பாக அம்பலப்படுத்தி நிற்கிறது என்றார்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ்












Click it and Unblock the Notifications