யூ டியூப் வீடியோ.. ஜெபத்தில் மாமியார்.. கேரளாவில் குண்டை உருவாக்கியது எப்படி? குற்றவாளி வாக்குமூலம்
திருவனந்தபுரம்: களமசேரியில் வெடித்த வெடிகுண்டை தயாரித்தது எப்படி என்று டொமினிக் மார்ட்டின் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
என்ன கூறினார்: இதுதொடர்பாக கேரளா டிஜிபி ஷேக் தர்வேஷ் அளித்த பேட்டியில், கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது உறுதி ஆகி உள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை செய்து வருகிறது. இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
கைது: கேரள மாநிலம் களமசேரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்து உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
Jehovah's Witnesses என்ற கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் நடத்திய ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நடத்த இடத்தில் 2000 பேர் வரை கூடி இருந்தனர். வெடிகுண்டு படை, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதே நேரத்தில் கண்ணூர் ரயில் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவரை கைது செய்தனர்.
ஒப்புக்கொண்டார்: குண்டுவெடிப்பிற்கு தான்தான் காரணம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் யூ டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்க கற்றுகொண்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 2 வருடமாக அவர் குண்டுவெடிப்பை திட்டமிட்டுள்ளார். குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்காக கடந்த 6 மாதமாக யூ டியூப் வீடியோக்களை பார்த்து வந்த டொமினிக் தெரிவித்துள்ளார். மொத்தமாக குண்டை தயாரிக்க வெறும் ரூ.3 ஆயிரம் செலவிட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடித்த ஜெப கூட்டத்தில், மார்ட்டினின் மாமியார் பங்கேற்று இருந்ததும், அதை பற்றி கவலைப்படாமல் அவர் குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளார். கன் பவுடர் மற்றும் அமோனியம் நைட்ரேட் ஆகிய வேதிப்பொருளை வைத்து இவர் குண்டை உருவாக்கி உள்ளார். இதை யூ டியூப் மூலம் வீடியோ பார்த்து குண்டாக உருவாக்கி உள்ளது.
இதை கலந்து வெடிக்க வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொச்சியில் இருந்து இந்த பொருட்களை அவர் வாங்கி உள்ளார்.
-
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்











Click it and Unblock the Notifications