"கூகுள் மேப்" ரூட்டில் சென்ற கார்.. திடீர்னு ஓடையில் இறங்கியது.. நள்ளிரவில் அலறிய 4 பேர்.. என்னாச்சு

நள்ளிரவில் கூகுள் மேப் உதவியுடன் சென்ற கார் ஓடையில் விழுந்தது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நள்ளிரவு நேரம், கூகுள் மேப் உதவியுடன் சென்ற நபரின் கார், ஓடையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாம் இன்று புதிதாக ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால், அங்கு வழி தெரியாமல் இருக்கும் போது, நாம் எதையும் யோசிக்காமல் கூகுள் மேப்பின் உதவியை நாடுவோம்...

கூகுள் மேப் ஒரு இடத்தின் வழி தடங்களை சரியாக கணித்து, அந்த வழியாக டிராபிக் எவ்வளவு இருக்கிறது, எத்தனை கிமீ அந்த இடம் உள்ளது என்பது உள்ளிட்ட பல தகவல்களை நமக்கு காட்டி தந்துவிடும்.

இதே கூகுள் மேப் உலகில் சில பகுதிகளுக்கு மட்டும் கூகுள் 3டி வியூகளை வழங்குகிறது. அதாவது அந்த பகுதியில் நாம் உண்மையிலேயே நடந்து செல்லும் போது எப்படி உணருவோமோ அப்படியான அனுபவத்தை தரும் வியூகளை நமக்கு வழங்குவதால், இதை நம்பி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தைரியம் வாகன ஓட்டிகளிடம் உள்ளது.

 கல்யாண மண்டபம்

கல்யாண மண்டபம்

அதேசமயம் எப்போதாவது, தவறான தகவல்களும் இந்த மேப்பில் நடப்பதுண்டு.. இப்படித்தான் இந்தோனேஷியாவில் ஒரு குடும்பம் கல்யாணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தது.. கூகுள் மேப் மூலம் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர்.. உள்ளே போய் பார்த்தால், வேறு ஒரு மண்டபத்திற்கு வந்துவிட்டதும், அங்கு வேறு ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் நடந்து கொண்டிருப்பதும் அறிந்து இந்த குடும்பத்தினர் திகைத்து போய்விட்டனர்.. அதேபோல, ஒரு அதிர்ச்சி சம்பவமும் அமெரிக்காவில் நடந்ததாக 2 மாதங்களுக்கு முன்பு வெளியானது..

முண்டம்

முண்டம்

கூகுள் மேப்பில் ஒருவர் அட்ரஸ் தேடி கொண்டிருந்தபோது, தலையே இல்லாமல் முண்டமாக ஒரு உருவம் நடந்து சென்றுள்ளது... பிறகு அந்த உருவம் டான்ஸ் ஆடுகிறது.. தாவி தாவி ஓடுகிறது.. கை, கால், தலை இப்படி எதுவுமே இல்லாமல் அந்த உருவம் இருந்துள்ளது.. இந்த போட்டோ இணையத்திலும் வெளியாகி இருந்தது. கடந்த 2021 மே மாதம் அந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. 2வது கொரோனா அலையின்போது எடுக்கப்பட்டதால் ரோட்டில் வேறு யாரும் இல்லை என்கிறார்கள்..

 கூகுள் மேப்

கூகுள் மேப்

எனினும், இது ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறா அல்லது கம்ப்யூட்டர் கிராபிக்ஸால் உருவாக்கப்பட்டதா? என்ற விசாரணை ஆரம்பமானது.. அதற்கு பிறகு அந்த சம்பவம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இப்போது இன்னொரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.. திரூர் பகுதியில் சார்ந்த டாக்டர் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் புதுக்குளம் பகுதி நோக்கி நேற்றிரவு 12 மணி அளவில் கூகுள் மேப் உதவியுடன் சென்று கொண்டிருந்தார்... காருக்குள் மொத்தம் 4 பேர் இருந்தனர்..

பிரேக்

பிரேக்

அப்போது பாலசித்ரா மலைபாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது.. எனவே, , காரை மலைப்பாதை வழியாக அவர் இயக்கியுள்ளார்... நைட் நேரம் என்பதால் பாதை சரியாக தெரியவில்லை.. ஆனால், பாதை முடியும் இடத்தில் ஒரு ஓடை இருந்துள்ளது.. இது தெரியாமல், ஓடையில் போய் கார் விழுந்துவிட்டது.. சாலை முடிந்துவிட்டது என்பதை கடைசி நேரத்தில்தான் டாக்டர் பார்த்தார்.. உடனே சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கிவிட்டது..

 ஓடையில் இறங்கிய கார்

ஓடையில் இறங்கிய கார்

காரில் இருந்தவர்கள் அனைவரும் அலறி சத்தம் போட்டுள்ளனர்.. அது ஒதுக்குப்புறமாக இருந்த பகுதி என்பதால், யாருக்கும் இவர்கள் சத்தம் போட்டது கேட்கவில்லை.. அந்த 4 பேரில் 4 மாத குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.. வயல்வெளி சேற்றில் கார் சிக்கியதால், அதிர்ந்து போன அந்த டாக்டர், சேற்றில் இருந்து காரை வெளியே எடுக்க முடியாமல் தவித்தார்.. நள்ளிரவு நேரம் என்பதால் யாருமே அந்த பகுதியில் இல்லை.. பலமுறை முயற்சித்தும் காரை சேற்றில் இருந்து மீட்க முடியவில்லை.

 டாக்டர்

டாக்டர்

இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய டாக்டர், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தேடி சென்று, நடந்ததை சொல்லி உதவி கேட்டார்.. இதையறிந்த அந்த பகுதி மக்கள், விரைந்து வந்து காரில் இருந்த குழந்தை உட்பட 4 பேரையும் மீட்டனர்.. உடனடியாக மாற்று வண்டி ஏற்பாடு செய்து தந்தனர்.. பின்னர், டாக்டர் தவிர, காரில் இருந்த மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி புதுக்குளம் பகுதிக்கு சென்றனர். மழையால் வழித்தடத்தை கூகுள் மேப்பால் காட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+