Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவை உலுக்கிய கோர விபத்து.. படகு கவிழ காரணம் இதுதான்! ‘லிமிட்’ தாண்டி.. லைஃப் ஜாக்கெட் இல்ல! ஐயோ!

Subscribe to Oneindia Tamil

மலப்புரம் : கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து 21 பேர் பலியான நிலையில், படகில் அதிகம் பேர் பயணம் செய்ததே படகு கவிழ்ந்ததற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், பயணிகள் பாதுகாப்பு ஜாக்கெட்களை அணியாதது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி பகுதியில் தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசுப் படகு நேற்று மாலை 6.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

How the boat overturned in malappuram: major tragedy in kerala : reason for death toll increased

கோர விபத்து : கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தனூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலா தலமாக உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தூவல் தீரம் ஆற்றில் சுற்றுலா படகு சவாரி நடைபெற்று வருகிறது.

Recommended Video

    Worst In History | Kerala Boat விபத்து நடந்தது எப்படி? அதிக உயிரிழப்பு ஏன்? | Oneindia Tamil

    இந்நிலையில், நேற்று இரவு 6.30 மணியளவில் கடைசி சவாரியாக சுற்றுலா படகு 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டது. படகு புறப்பட்டு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்து படகு திடீரென கவிழ்ந்தது.

    மீட்புப் பணி : படகு கவிழ்ந்ததை அறிந்து சிலர் நீரில் குதித்து நீந்திக் கரையை அடைந்தனர். படகு நீரில் கவிழ்ந்து சேற்றில் புதைந்தது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட இதுவரை 21 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 8 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    How the boat overturned in malappuram: major tragedy in kerala : reason for death toll increased

    இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. கேரள அமைச்சர்கள் முகமது ரியாஸ், அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். படகை உடைத்து, உள்ளே சிக்கியோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    படகு கவிழ காரணம் : 25 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோரை ஏற்றியதே படகு கவிழ முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பயணிகள் ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், சுற்றுலா பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்ததும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், அங்கு படகு சவாரி மாலை 5 மணி வரையே அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 மணிக்கு மேல் படகை இயக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பலி எண்ணிக்கை உயர்வு : இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகு கவிழ்ந்ததால், அடிப்பகுதியில் இருந்தவர்களை காப்பாற்ற முடியவில்லை என படகில் இருந்து குதித்து நீந்தி உயிர் தப்பிய இளைஞர் ஷஃபீக் தெரிவித்துள்ளார். மீட்புப் படையினருடன் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 21 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. படகில் 40-50 பேர் பயணித்ததாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மூழ்கியவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+