Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேஸ்புக் பாய் பெஸ்டி! நம்பி சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர்.. கேரளாவில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி 22 வயது இளம்பெண் ஒருவரை 4 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தற்போது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "கோழிக்கோடு பகுதியில் உள்ள பந்தீரன்காவு பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் பத்மா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பட்டதாரியான இப்பெண் வீட்டுக்கு அருகில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இவருக்கு அடிக்கடி ஒரு கணக்கிலிருந்து மெசேஜ் வந்திருக்கிறது. முதலில் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த அவர், பின்னர் வந்த மெசேஜ்களை ஒருநாள் படித்து பார்த்திருக்கிறார்.

அதில் எந்த வார்த்தையும் ஆபாசமாகவும் அபத்தமாகும் இருந்திருக்கவில்லை. எனவே அந்த கணக்குக்கு பத்மா மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இப்படியாக சம்பந்தப்பட்ட நபருக்கும் பத்மாவுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படியே பேசிக்கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் செல்போன் எண்ணையும் பகிர்ந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் இந்த அழைப்புகள் குறைவான அளவில்தான் இருந்திருக்கிறது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல சம்பந்தப்பட்ட இளைஞன் அடிக்கடி போன் செய்து பேசியிருக்கிறார்.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம்

பத்மாவும் இளைஞனை நம்பியிருக்கிறார். இதுவும் இப்படியே போய்க்கொண்டிருக்கையில் திடீரென ஒருநாள் இருவரும் சந்திக்கலாம் என்று அந்த இளைஞன் கூறியுள்ளார். ஆனால் பத்மா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இளைஞனும் விடுவதாயில்லை. கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்திற்கு பின்னர் பத்மா இதற்கு ஒப்புக்கொண்டார். எனவே இருவரும் சில நாட்களுக்கு முன்னர் பொது இடத்தில் சந்தித்திருக்கின்றனர். இதனையடுத்து அருகில் உள்ள இடங்களுக்கு அந்த பத்மாவை அந்த இளைஞன் அழைத்து சென்றுள்ளார். இப்படியாக இவர்கள் நட்பு நீடித்திருக்கிறது.

காதல்

காதல்

சினிமாக்களில் நடப்பதைப்போல் மற்றொருநாள் இந்த இளைஞர் பத்மாவை அழைத்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போவதாகவும் மிகவும் அவசரம் எனவே உடனடியாக சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பத்மாவும் அவசர அவசரமாக வந்துள்ளார். அப்போது இளைஞர் பத்மாவை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு கோபமடைந்த பத்மா காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. மட்டுமல்லாது இது குறித்து இனி தன்னிடம் பேச வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார். இந்த சம்பவத்தையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் இளைஞன் பத்மாவை அழைத்து பேசி தன்னுடைய நடத்தைக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ஜூஸ்

ஜூஸ்

மட்டுமல்லாது மீண்டும் ஒருமுறை இருவரும் சந்திப்போம் என்று இளைஞர் கூற அதற்கு பத்மா மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இதுதான் கடைசி சந்திப்பு என்றும் இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் இளைஞன் வாக்கு கொடுத்திருக்கிறார். இதனையடுத்து 4 நாட்களுக்கு முன்னர் இளைஞன் பத்மாவை ஒரு அப்பார்ட்மென்ட்க்கு அழைத்து சென்றிருக்கிறார். இது தனது அப்பார்ட்மென்ட் என்று கூறியுள்ளார். அங்கு இருவரும் ஜூஸ் குடித்திருக்கிறார்கள். இதுவரை மட்டும்தான் பத்மாவுக்கு நினைவிருந்திருக்கிறது. மற்ற விஷயங்கள் நினைவில் இல்லை. ஏனெனில் ஜூஸ் குடித்தவுடன் அவர் மயங்கி விழுந்திருக்கிறார்.

கைது

கைது

அதன் பின்னர் எழுந்து பார்க்கையில் தனது ஆடைகள் களையப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மட்டுமல்லாது இவரது உள்ளாடைகள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் சிதறி கிடந்துள்ளன. வரும்போது ஒரேயொரு இளைஞன் மட்டும் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 3 பேர் அறையில் இருந்திருக்கின்றனர். அப்போதுதான் தான் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டோம் என்பது பத்மாவுக்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்திருக்கிறார். பின்னர் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சேவாயூரைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளோம். மற்றொரு நபர் தலைமறைவாகியுள்ளார். அவரையும் விரைவில் கைது செய்வோம்" என்று கூறியுள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் பழகிய இளம்பெண்ணை 4 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+