Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா பரவல்.. மத்திய கிழக்கு நாடுகளில் வேலையிழந்து.. நாடு திரும்பிய 10.45 லட்சம் மலையாளிகள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியுள்ளனர். அவர்களில் 10.45 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று அம்மாநில வெளிநாடுவாழ் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. கொரோனா பாதிப்பால் பல நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதுபோன்ற கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வந்தவர்கள்தான். கொரோனா அச்சத்தால் அவர்கள் பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்,

15 லட்சம் பேர்

15 லட்சம் பேர்

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு அதிகம் வேலை செய்யச் சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பால் கடந்த மே மாதம் முதல் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியுள்ளனர் என அம்மாநில வெளிநாடுவாழ் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஐக்கிய அமீரகம், சவுதி, கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர். வெறும் 55 ஆயிரம் பேர் மட்டுமே மற்ற நாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர்.

நான்கு நாடுகள்

நான்கு நாடுகள்

கொரோனா பரவல் தொடங்கிய போது, கடந்த 2020ஆம் ஆண்டு மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 8.40 லட்சம் பேர் கேரளா திரும்பியுள்ளனர். ஆனால், இந்தாண்டு ஜனவரி முதல் அடுத்த ஆறு மாதத்தில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. அதாவது சுமார் 14.63 லட்சம் பேர் கேரளா திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், பணிபுரிவோர் மாதாமாதம் அனுப்பும் தொகை தான் நீண்ட காலமாக கேரள மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேலையிழப்பு

வேலையிழப்பு

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 15 லட்சம் பேரில், சுமார் 70%, அதாவது 10.45 லட்சம் பேர் வெளிநாடுகளில் தங்கள் வேலைகளை இழந்ததால் நாடு திரும்பியுள்ளனர். 2.90 லட்சம் பேர் விசா உள்ளிட்ட காரணங்களால் இந்தியா திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய மற்றவர்கள் குழந்தைகள், மூத்த குடிமக்கள் கேரள வெளிநாடுவாழ் பணியாளர்கள் மையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்

கடந்த மே மாதம் முதல் கேரளாவின் நான்கு சர்வதேச விமான நிலையங்களில் இருந்து மட்டும் சுமார் 27 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கம். இருப்பினும் சரியான தரவுகள் இல்லாததால் வேலையிழந்து நாடு திரும்பிய எத்தனை பேர், மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை.

புதிய சிக்கல்

புதிய சிக்கல்

இந்தியாவில் பரவும் டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனாவால் பல நாடுகளும் இந்தியப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மீண்டும் சீராக சில ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், நாடு திரும்பியவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+