அந்த மனசு தான்.. குவைத்தில் உயிரிழந்த மலையாளிகள்! மனமிறங்கும் தொழிலதிபர்கள்.. இவ்வளவு நிதியுதவியா?
திருவனந்தபுரம்: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு தொழிலதிபர்களும் உயரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியை அளித்து வருகின்றனர்.
குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் குவைத் நேரப்படி நேற்று முன் தினம் அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பற்றியது.
அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்தது.
மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசு சார்பில் சிறப்பு விமானம் அனுப்பி குவைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கேரளா அஞ்சப்படுகிறது. இந்நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை ஆகியோர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தங்கள் சொந்த நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றார். அதன்படி யூசுப் அலி தலா ஐந்து லட்சமும், ரவி பிள்ளை தலா 2 லட்சமும் நிதி உதவியாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றனர்.
ஏற்கனவே கேரளா அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருக்கும் நிலையில் தற்போது தொழிலதிபர்களின் நிதி மூலமாக உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மொத்தமாக சுமார் 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் உள்ளுரைச் சேர்ந்த பல்வேறு தொழிலதிபர்களும் அமைப்புகளும் உயரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியை அறிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்கள் சற்று நேரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலமாக கொச்சி கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பீகார், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களின் உடல்கள் தனி தனி வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட இருக்கிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மற்றும் ஒரு ஐஏஎஸ் அலுவலரை குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்து முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் வீணா ஜார்ஜ் குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கவிலை என சர்ச்சை எழுந்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications